புதுதில்லி, அக். 27 - உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ‘கேலப்’ என்ற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான 121 நாடுகள் கொண்ட பட்டி யலில் இந்தியா 80 புள்ளி களுடன் 60-வது இடத்தைப் பிடித்துள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றுக்கு கீழே சிறிய வித்தியாசத்தில் இந்தியா உள்ளது. பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ் தான் (95), நார்வே (93), சுவிட் சர்லாந்து (92), இந்தோனே சியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன. பாது காப்பில் குறைந்த கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ(58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.