கொச்சி, ஜுன் 1- கேரளத்தில் திருக்காக்கரை சட்டப்பேர வை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 68.73 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது. மொத்தமுள்ள 1,96,805 வாக்காளர்களில் 1,35,143 பேர் வாக்களித்தனர். திருக்காக்கரையில் செவ்வாயன்று (மே 31) மழை நின்றதால் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. மம்முட்டி உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங் கள் காலையில் வாக்களிக்க வந்தனர். எல்டிஎப் வேட்பாளர் ஜோ ஜோசப் வாழக்காலயில் உள்ள சாவடி எண் 140-லும், யுடிஎப் வேட்பாளர் உமா தாமஸ் பாலாரி வட்டம் பைப்லைன் சந்திப்பில் உள்ள சாவடி 50-லும் வாக்களித்தனர்.