ஹங்கேரி நாட்டவருக்கு இலக்கிய நோபல் பரிசு
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு திங்களன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்து வம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு ஏற்கெ னவே அறிவிக்கப் பட்ட நிலையில், வியாழக்கிழமை அன்று ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னா ஹோர்காய்-க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு மத்தியில் கலைத்திறனை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
