states

img

இந்தியாவின் தற்போதைய சூழல் அச்சம் தருகிறது!

புதுதில்லி, ஜூலை 2- மத அடிப்படையிலான நூபுர் சர்மா போன்  றோரின் வெறுப்புப் பிரச்சாரங்கள், அதை யொட்டிய வன்முறைச் சம்பவங்கள் அதிக ரித்து வரும் நிலையில், “இந்திய நாட்டின் தற்  போதைய சூழல் அச்சம் தருவதாக உள்ளது” என்று அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார். “இந்தச் சூழலில், இந்துக்களும் முஸ்  லிம்களும் நீண்டகாலமாக கடைப்பிடித்துவரும் சகிப்புத்தன்மை கொண்ட உள்ளார்ந்த கலாச்சா ரத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; ஒற்றுமை யாக இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். நோபல் பரிசு பெற்றவரும், உலகின் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரு மான அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட்  லேக் பகுதியில் தனது பெயரிலான ஒரு ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழாவில் கலந்து  கொண்டு உரையாற்றினார். அப்போது இந்தி யாவின் மதச்சார்பின்மை பாரம்பரியம் குறித் தும், அதற்கு தற்போதைய பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் கவலை களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“நான் ஏதாவது பயப்படுகிறேனா என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் ‘ஆம்’ என்று கூறுவேன். இப்போது பயப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நாட்டில் தற்போது நிலவும் சூழல் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வரலாற்று  ரீதியாக தாராளமாக - மக்கள் ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டி ருக்கும் ஒரு நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை.  இந்தியா இந்துக்களால் மட்டும் இருக்க முடி யாது. அதேபோல மீண்டும் முஸ்லிம்களால் மட்டும் இந்தியாவை உருவாக்கி விடவும் முடி யாது. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. அந்த வகையில், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றி ணைந்து செயல்படுவதே காலத்தின் தேவை. யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் இந்தியாவில் ‘யுக காலமாக’ இணைந்து வாழ்கி றார்கள் என்பது இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச்சாரத்திற்கு உதாரணம். ஆனால், வழி பாட்டுத் தலங்களை மீட்கிறோம் என்ற பெயரி லான சமீபத்திய (பாபர் மசூதியை இடித்து விட்டோம்; அடுத்து வாரணாசி ஞானவாபி மசூ தியை இடிப்போம்; தாஜ் மஹால், குதூப்  மினார்களை தகர்ப்போம் என்பன போன்ற)  முயற்சிகளைப் பொறுத்தவரை, இந்துக்கள் ஒரு குழுவாக ‘தாஜ்மஹாலின் பெருமையைப் பெற்றுவிட முடியும்’ என்று நான் நினைக்க வில்லை.

“ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷிகோ, 50 உபநிடதங்களை அசல் சமஸ்கிருதத்தி லிருந்து பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தார், இது இந்து மத நூல்கள், இந்து கலாச்சாரம் மற்றும் இந்து மரபுகள் பற்றி உலகம் அறிய  உதவியது. பண்டிட் ரவிசங்கர் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் ராகங்களும் இசை யும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் மந்திரத்தை உருவாக்க உதவியாக இருந்தன. அடிக்கடி நிகழும் துண்டு துண்டான ஆபத்து களை இந்திய நீதித்துறை கவனிக்கவில்லை. இது பயமாக இருக்கிறது. பாதுகாப்பான எதிர்  காலத்திற்கு, இந்தியாவில் நீதித்துறை, சட்ட மன்றம் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவற் றுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும். மக்களைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ள காலனித்துவச் சட்டங்கள் இன்றும் பயன்படுத் தப்படுவது அசாதாரணமானது. இவ்வாறு அமர்த்தியா சென் பேசியுள்ளார்.

;