தங்கத் தகடு விவகாரம் விசாரணையைத் தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு
சபரிமலையில் துவாரபாலக சிற்பத்தில் பதிக்கப்பட்ட தங்க தகடுகள் திருடப்பட்டது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புல னாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளியான உன்னி கிருஷ்ணன் போற்றியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதுகுறித்த இடைக்கால அறிக்கையை சிறப்பு புல னாய்வுக்குழு நீதிமன்றத்தில் செவ்வா யன்று சமர்ப்பித்தது. அதன்படி விசார ணையைத் தொடரலாம் எனவும் கூட்டுச் சதி குறித்தும் விசாரிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு நவம்பர் 15ஆம் தேதி மீண்டும் பரிசீலிக்கப்பட உள்ளது. இதனிடையே சபரிமலையில் திருட்டு நடந்திருப்பதை தேவசம் விஜி லென்ஸ் கண்டறிந்துள்ளது. துவார பாலக சிற்பத்தின் தங்கத் தகடுகளை கடத்துவதில் சதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவசம் விஜி லென்ஸ் இந்த விவகாரத்தில் தனது விசாரணையின் இறுதி அறிக்கையை விஜிலென்ஸ் எஸ்பி சுனில் குமார் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சபரி மலையின் சில அதிகாரிகள் உன்னி கிருஷ்ணன் போற்றியுடன் கூட்டுச் சேர்ந்த னர். தேவசம் குறிப்பேட்டில் தங்க தகடை செம்பு என்று எழுதப்பட்டிருப்பது சதியின் ஒரு பகுதியாகும் என்று விஜிலென்ஸ் அறிக்கை கூறுகிறது. இந்த வழக்கை நீதிபதி ராஜா விஜய ராகவன் தலைமையிலான அமர்வு பரி சீலித்து வருகிறது. இந்த அறிக்கையை நீதிமன்றம் விரிவாக ஆராயும்.விரி வான விசாரணை தேவை என்று கேரள அரசு முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தேவசம் விஜி லென்ஸ் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்த வேண்டும் என்று நீதி மன்றத்தில் தெரிவித்தது. துவாரபாலக சிற்பங்களை கடத்தியதற்காக கமிஷன் பெறப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். தேவசம் கமிஷ னர் இந்த விஷயத்தில் தலையிடாதது சந்தேகத்திற்குரியது என்றும் விஜி லென்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது. 2019 ஜூலை 20 அன்று தங்கத் தகடு அகற் றப்பட்டதாக விஜிலென்ஸ் கண்டறிந்தது.
