states

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு

ஸ்ரீநகர்,ஜன.9- ஜம்மு காஷ்மீரில் பெய்துவரும் கடும் பனிப்பொழிவால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. வீடுகளும், சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளன.  ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்கு வரத்து தடைபட்டுள்ளது. இதனால் ஏராள மான  வாகனங்கள் அப்பகுதியில் அணி வகுத்து நிற்கின்றன. இதனிடையே குப்வாரா  மாவட்டத்தில், தங்தார் என்ற இடத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் பனியின் மீது இந்திய ராணுவத்தினர் குகுரி எனும் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.