இமாச்சலப்பிரதேசத்தில் கனமழைக்கு 92 பேர் பலி ரூ.751.78 கோடி நிதி இழப்பு
இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பருவமழை ஜூன் மாதம் தொ டங்கியது. பல்வேறு மாவட்டங்க ளிலும் கனமழை, மேகவெடிப்பு ஆகி யவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜூன் 20 முதல் ஜூலை 11 வரை கனமழை, மேகவெடிப்பு நிகழ்வுகளில் சிக்கி 92 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில வரு வாய்த் துறையின் பேரிடர் மேலாண்மை பிரிவின் அவசரக் கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியான அறிக் கையில்,”மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதங்களில் கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக 92 பேர் உயிரி ழந்துள்ளனர். மொத்த இறப்புகளில் 56 பேர் மேகவெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், மின்சாரம் பாய்தல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தனர். 36 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந் துள்ளனர். பருவமழை தொடர்பான பேரழிவுகள் காரணமாக இமாச்சலப் பிரதேசம் முழுவதும் மொத்தம் ரூ.751.78 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.