ஹைதராபாத்தில் பெருமழை வெள்ளம்: 3 பேர் மாயம்
தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் நகரம் முழு வதும் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்நகரின் நாராயண்ராவ்பேட்டை என்ற பகுதியில் அதிகபட்சமாக 245.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ளம் நிரம்பி மழைநீர் வெளியேற முடியாமல் போக்குவரத்து கடுமையா கப் பாதிக்கப்பட்டுள்ளது. பல கடை களில் வெள்ளம் புகுந்து உணவுப்பொ ருட்கள் சேதமாகியுள்ளன. இந்நிலையில் அதீத வெள்ளத்தை தாங்க முடியாமல் பர்சிகுட்டா என்ற பகுதியில் இருந்த வெள்ள நீர் வடிகால் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சன்னி என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். அதேபோல நம்பள்ளி பகுதியில் அர்ஜுன்(26), ராமா(28) ஆகிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புப் படையினர் அந்த மூவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிகவும் மோசமான வடிகால் அமைப்பு முறையே இவ்வளவு பாதிப்பு களுக்கு காரணம். நகர்ப்புற வடிவ மைப்பு அனைவருக்கும் பொதுவான தாக இல்லை. அது பெரும் பணக் காரர்களுக்கு மட்டுமே வசதியாக உள்ளது. இதனால் பெரும் மழை வெள்ளம் ஏற்படும் போது அதிகப் பாதிப்பை சந்திப்பது ஏழை எளிய மக்களாகவே உள்ளனர் எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.