states

img

தெலுங்கானாவை அச்சுறுத்தும் வெயில் மேலும் 4 டிகிரி செல்ஸியஸ் உயரும் அபாயம்

தெலுங்கானாவை அச்சுறுத்தும் வெயில் மேலும் 4 டிகிரி செல்ஸியஸ் உயரும் அபாயம்

ஹைதராபாத் நாட்டில் வெயில் காலம் தீவிரமடைந்து வரு கிறது. வடமாநிலங்களை விட தென்னிந்தியாவின் தெலுங்கா னா மாநிலத்தில் தற்போதே வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது அங்கு 35 டிகிரி செல்ஸியஸ் அள விற்கும் அதிகமான அளவில் வெயில் வாட்டி வரும் நிலையில், கம்மம் மாவட்டத்தின் பெனுபள்ளி பகுதியில் மாநிலத்திலேயே அதிக பட்சமாக 39 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.  இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடும் வெப்பம் நிலவும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,“அடுத்த இரண்டு நாட்களு க்கு மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட மிக அதிகமாக இருக்கும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பான அளவை விட 3 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை கூடுதலாகப் பதி வாகக்கூடும். கம்மம், அதிலாபாத், நிஜாமாபாத் மற்றும் ஹைதராபாத் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வறண்ட காற்று வீசு வதால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைக்காலம் முழுமையா கத் தொடங்கும் முன்பே வெப்ப நிலை 40 டிகிரி செல்ஸியசை நெருங்கி வருவது தெலுங்கானா மக்களிடையே கவலையை ஏற் படுத்தியுள்ளது.