states

img

இடது ஜனநாயக முன்னணி அரசின் உறுதியால் சாத்தியமானது பெரும்பளம் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் கேரள முதலமைச்சர்

இடது ஜனநாயக முன்னணி அரசின் உறுதியால் சாத்தியமானது பெரும்பளம் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் கேரள முதலமைச்சர்

சேர்த்தலா கேரளத்தின் மிகப்பெரிய வேம்பநாட்டு ஏரியின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கட்டப்பட்ட பெரும் பளம் பாலத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் சனியன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த பாலத்தை கட்ட முடி யாது, ஒருபோதும் சாத்தியப் படாது என்று கருதப்பட்ட பெரும் பளம் பாலம், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மன உறுதியால் நிஜமாகியுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தின் மற்றொரு கனவுத் திட்டமான ஆலப் புழா-சங்கனாச்சேரி சாலையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மாநி லத்தின் மிக நீளமான பாலமான பெரும்பளம் பாலம், கிப்பி (KIIFB) நிதி மூலம் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்தப் பாலம், ஏரியால் சூழப் பட்ட பெரும்பளம் பஞ்சாயத்தை நாட்டின் மேற்குப் பகுதியுடன் இணைக்கிறது. சாலைத் தொடர் பின்றி தனிமைப்பட்ட மக்களுக்குப் புதிய வாழ்க்கையை அளிப்பதும், அழகிய பெரும்பளம் தீவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றுலா மேம்பாட்டை சாத்திய மாக்கும் அரசாங்கத்தின் பெரு மைமிக்க திட்டமாகும் இது. சட்டத் தடைகள் உள்ளிட்ட சவால்களைத் தாண்டி இந்தப் பாலம் நனவாக்கப்பட்டது. 10,000 பேர் மட்டுமே வசிக்கும் பெரும் பளம் மக்களுக்கு 100 கோடிக்கும் அதிகமான செலவில் பாலம் கட்டப்பட்டது கேரள வளர்ச்சி வர லாற்றில் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியின் சுவையை அனை வருக்கும் கொண்டு செல்லும் அரசின் கொள்கை இப்பகுதி மக்க ளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அருகுட்டி பஞ்சாயத்தில் உள்ள வடுதலாவில் 11 மீட்டர் அகலத் தில் தொடங்கும் இந்தப் பாலம், காண்போரைக் கவரும் ஒரு காட்சி யாக உள்ளது. தேசிய நீர்வழிப் பாதை கடந்து செல்லும் இடங்க ளில் தூண்களைத் தவிர்ப்பதற்காக வில் வடிவ வளைவு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு கட்டு மானம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள ஓவியம் வானவில் வண்ணங்களில் உள்ளது. மேலும் மான்கொம்பு சந்திப் பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.752 கோடி செலவில் கட்டப்பட்ட ஏசி சாலை, ரூ.65.5 கோடி செல வில் கட்டப்பட்ட பதஹரம் பாலம், ரூ.10.5 கோடி செலவில் கட்டப் பட்ட காவலம் தட்டச்சேரி பாலம் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த விழா வுக்கு‌  சுற்றுலா மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என். பாலகோபால், சாஜி செரியன், பி.பிரசாத், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற  மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.