மூத்த பத்திரிகையாளர் இந்திரதீப் பட்டாச்சார்யா
ஈரானில் உள்ள ஷஜாரே பள்ளி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 168 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த மாணவர்களைப் புல்டோசர்கள் மூலம் ஒரே குழிகளில் ஒட்டு மொத்தமாக அடக்கம் செய்வதாக ஒரு காணொலியை உச்சநீதி மன்ற வழக்கறிஞரும், பாஜக ஆதரவாளருமான ஷஷாங்க் சேகர் ஜா பதிவிட்டுள்ளார். இது போலியான தகவல் ஆகும். இஸ்லாமி யர்களுக்கு எதிராக வன்மத்தை பாஜக பரப்புகிறது.
ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா
ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே, ஈரானின் ஆட்சியைப் பற்றி அந்த நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அமெரிக்கா, இஸ்ரேல் அல்ல.
சாம்சேஸ் சமூக ஊடகம்
தற்போது நடைபெற்று வரும் போர் குறித்த இந்தியத் தொலைக்காட்சி சேனல்களின் செய்தி சேகரிப்பு, ஒளிபரப்பு முறை மிகவும் மோசமடைந்து வருகிறது. அதே போல போர் குறித்த செய்திகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ஒன்றிய அமைச்சகம் தொலைக்காட்சி தரவரிசைப் புள்ளிகளை நிறுத்தி வைத்துள்ளது.
திரிபுரா மாணவர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகம்
மாநில கருவூலத்திலிருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு, மாணவர் களை வெளிமாநிலங்க ளுக்கு யுபிஎஸ்சி பயிற்சிக்காக அனுப்பியும், திரிபுரா மாநிலம் இந்த ஆண்டும் முடிவுகள் ஏமாற்றத்தையே அளித்துள்ளன. ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. அதே சமயம் பதற்றமான மணிப்பூரில் இருந்து 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
