மனித மூளையின் கூகுள் எர்த் - ஆய்வில் சென்னை ஐஐடி!
சென்னை ஐஐடி-யின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம், மனித மூளையின் மிகத் துல்லியமான “டிஜிட்டல் வரைபடத்தை” உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட மனித மூளை மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூளையின் ஒவ்வொரு பகுதியையும் மில்லியன் கணக்கான வண்ணத் துண்டுகளாக பிரித்து, அடுக்கு அடுக்காக இணைத்து, பின்னர் ஆயிரக்கணக்கான படங்களை கணினி மென்பொருள் இணைத்து மூளையின் 3D டிஜிட்டல் வரைபடம் உருவாக்கப்படுகிறது. ஒரு மூளையை ஆய்வு செய்யும்போதே petabytes அளவிலான தரவு உருவாகிறது. இதை ஏஐ மற்றும் கணினி கணக்கீடு மூலம் பகுப்பாய்வு செய்கிறார்கள். இது ‘Google Earth’ போல, மூளையின் ஒவ்வொரு அடுக்கையும் துல்லியமாக காண்பிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் , மூளை எப்படி வளர்கிறது, வயதானபோது எப்படி மாறுகிறது, நோய்கள் எப்படி உருவாகின்றன என்பதைக் குறித்து ஆய்வு மேற்கொள்ள உதவும். மேலும், ஸ்ட்ரோக், அல்சைமர் போன்ற மூளை நோய்களை மிகத் துல்லியமாக கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் இந்த வரைபடம் உதவும் என்றும், ஒரு ஆரோக்கியமான மூளை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படை தரவு கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஓஎஸ் 26.4 பீட்டா 3 பதிப்பு வெளியீடு!
ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 26.4 பீட்டா 3 இன் திருத்தப்பட்ட பதிப்பை டெவலப்பர்களுக்காக வெளியிட்டுள்ளது. இந்த புதிய பதிப்பு, முன்பு வெளியிடப்பட்ட build (23E5223f) ஐ மாற்றி, 23E5223k என்ற build எண்ணுடன் வருகிறது. இதில், சில பிழை திருத்தங்கள், அமைப்பு நிலைத்தன்மை மேம்பாடு,செயல்திறன் மேம்பாடு ஆகிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அப்டேட்டில் சோதனை செய்யப்படும் சில புதிய அம்சங்கள்: • Apple Music-இல் புதிய ஆல்பம் மற்றும் பிளேலிஸ்ட் வடிவமைப்பு • ஏஐ அடிப்படையிலான “Playlist Playground” – text prompt மூலம் பிளேலிஸ்ட் உருவாக்கும் வசதி • End-to-end encrypted RCS messaging – ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் இடையேயான சாட் பாதுகாப்பு மேம்பாடு • ஆப்பிள் பாட்காஸ்ட்-இல் வீடியோ பாட்காஸ்ட் வசதி • Personal Hotspot data usage report (device-க்கு தனித்தனி) • Ambient Music widget – தூக்கம், வேலை, நலன் போன்றவற்றுக்கான இசை • Stolen Device Protection default-ஆக இயங்கும் – முக்கிய செயல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு • டார்க் மோட் menu, ஆப் ஸ்டோர் கணக்கு போன்ற இடங்களில் சிறிய UI மாற்றங்கள் ஐஓஎஸ் 26.4 டெவலப்பர் பீட்டா 3 எப்படி இன்ஸ்டால் செய்வது? • முதலில் Apple Developer beta programme-இல் உங்கள் Apple account-ஐ பதிவு செய்ய வேண்டும். • ஐபோனில் Settings திறந்து General Software Update செல்லவும். • Beta Updates என்பதைத் தேர்வு செய்யவும். • iOS 26 Developer Beta-ஐ தேர்வு செய்யவும். • அப்டேட் தோன்றியதும் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து இதனை பயன்படுத்தலாம்.
