articles

img

நாளும் உழைத்திடு பாப்பா! - கீரப்பாளையம் கோ.நெடுமாறன்

நாளும்   உழைத்திடு   பாப்பா!

சின்னப் பாப்பா! சின்னபாப்பா!  சொன்னதைக் கேளு சின்னபாப்பா! கன்னம் சிவந்த சின்னபாப்பா! கருத்தைக் கேளு சின்னபாப்பா!  வள்ளுவன் வழியில் நில்லுபாப்பா!  வாழ்க்கையில் அழகாய்ச் செல்லுபாப்பா! நாள்தோறும் ஒருகுறள் சொல்லுபாப்பா! நானிலம் போற்ற வாழுபாப்பா!  கற்பதை என்றும் நிறுத்தாதே! கற்பனைக் கதைகளை நம்பாதே! பற்பல பொய்களைச் சொல்வார்கள்! சொற்சுவை யால் உனை வெல்வார்கள்!  சொற்கள் அழகாய் இருந்தாலும் கற்கண் டைப்போல் இனித்தாலும் உண்மை உணர்ந்திட வேணுமம்மா!  உன்னை இழந்திடல் ஆகாதம்மா!  நல்லவர் வாழ்வில் நலம்சேர நாளும் உழைத்திடு சின்னபாப்பா! நம்மைப் போலே எல்லோரும்  நலமாய் வாழணும் சின்னபாப்பா!