states

img

இந்தியா மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும்  மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை

இந்தியா மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும்  மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை

அமெரிக்கா - இஸ்ரேல் நாடுக ளின் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி யுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலகின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு போக்குவரத்தில் ஐந்தில் ஒரு  பங்கைத் தீர்மானிக்கும் சூழல் உள்ள நிலையில், அது தொடர்ந்து முடக்கப் பட்டால் இந்தியா மிக மோசமான பாதிப்பு களைச் சந்திக்கும் என பிரபல நிதி மதிப் ்பீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.  இதுதொடர்பாக அந்நிறுவனம் மேலும் கூறுகையில்,”ஹார்முஸ் ஜல சந்தியை தொடர்ந்து மூடுவது உலகப் பொரு ளாதாரத்திற்கு பெரும் ஆபத்தாக முடியும். குறிப்பாக ஆசிய நாடுகளி லேயே இந்தியா தான் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொள்ளும். எரிசக்தி இறக்குமதி செலவு அதிகரிப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பல வீனமடையும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டில் விலைவாசி  கடு மையாக உயரும். இறக்குமதி செலவு அதிகரிப்பது இந்தியாவின் பொரு ளாதார சமநிலையைப் பாதிக்கும்.  தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 93 டாலரைத் தாண்டி யுள்ளது. ஹார்முஸ் மீதான தடை நீடித்தால் அது 100 டாலருக்கும் மேல் செல்லக்கூடும். இதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.50% குறையக்கூடும். நுகர்வோர் விலை குறியீடு 0.40% உயரக்கூடும்.  இந்தியா தனது எண்ணெய் தேவையில் 85% மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் 90% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. தற்போது இந்தியாவிடம் உள்ள 100 மில்லியன் பேரல் எண்ணெய் இருப்பு, அடுத்த 5 முதல் 6 வாரங்களுக்கு மட்டுமே போது மானது.  ஜப்பான், தென் கொரியா போன்ற  நாடுகள் 6 மாத காலத்திற்கான இருப்பை வைத்துள்ள நிலையில், இந்தியாவின் கையிருப்பு கவலை அளிப்பதாக உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.