ஏழைகளின் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் கைவிரிப்பு
நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கையில் அம்பலம்
இந்தியா நான்காவது பொருளாதாரமாக வளர்ந்து விட்டது என பிரதமர் மோடி யும் பாஜகவினரும் பெருமை பேசி வருகின்றனர். இந்நிலையில் ஏழைகளின் வாழ்வா தாரத்தை பாதுகாப்பதற்கான சில முக்கிய நலத் திட்டங்களுக்குப் போதிய நிதியை பாஜக அரசு ஒதுக்காமல் கைவிரித்திருப்பது அம்பலமாகியுள் ளது. நாடாளுமன்றக் குழு அறிக்கைகள் மூலம் இது வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையி லான குழந்தைகளின் கல்வியை உரிமையாக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை செயல்படுத்து வதற்கான ‘சமக்ர சிக்சா அபியான்’ நிதியை முறை யாக வழங்கவில்லை. கடந்த 2020-21 மற்றும் 2023-24 நிதியாண்டுகளுக்கு இடையில், நாடு முழுவதும் 14,000 க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 2023-24ஆம் ஆண்டில், நாட்டில் உள்ள 10.15 லட்சம் அரசுப் பள்ளிகளில், 50,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சொந்தக் கட்ட டங்கள் இல்லை என்றும், 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறந்தவெளியில் இயங்கி வருவதாக வும் நாடாளுமன்ற நிலைக்குழு தனது அறிக்கை யில் தெரிவித்திருந்தது. கல்வி நிலையங்களுக்கு சொந்த கட்டடத்தை உருவாக்கி ,மாணவர்களின் கல்வியை பாதுகாக்க பாஜக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் பிரதமரின் ஊட்டச்சத்து திட்டமான ‘பிஎம்-போ ஷன்’ திட்டமும் போதுமான நிதியின்றி முடங்கி யுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 11 கோடி குழந்தைகள் இத்திட்டத்தால் பயன்பெற முடியும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.10,000 கோடியாகவே உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தடுக்கவும், கல்வி இடைநிற்ற லைக் குறைக்கவும் இத்திட்டத்தை 12 ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதேபோல், 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் ‘சக்சம் அங்கன்வாடி’ திட்டத்திற்கும் பெரும் நிதிப் பற் றாக்குறை நிலவுகிறது. 2025-26 ஆம் நிதியா ண்டுக்கு ரூ.38,403 கோடி தேவை என மதிப்பி டப்பட்ட நிலையில், வெறும் ரூ.21,960 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 1.57 லட்சம் அங்கன்வாடி மையங்களில் குடிநீர் வசதியும், 3.94 லட்சம் மையங்களில் கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம்... ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும் பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப் படாததால் கிராமப்புற மக்கள் வேலையின்மை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 13.5 கோடிப் பேர் பயனாளிக ளாக உள்ளனர். ஆனால், கடந்த 2023-24 ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இருந்து, 2025-26 ஆம் ஆண்டு வரையிலான நிதி ஒதுக் கீடு வெறும் 86,000 கோடியாக மட்டுமே உள்ளது. இதனையும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரி வித்துள்ளது. சமூக உதவித் திட்டம் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் தேசிய சமூக உத வித் திட்டத்தின் நிலைமையும் மிகமோசமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3.09 கோடிப் பேர் பயன டைந்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுக ளாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. உதவித்தொ கைக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு வெறும் 9,652 கோடியாகவே உள்ளது. 2022-23ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத் திற்கான நிதியை அதிகரிக்காததற்கான காரணத் தைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவே கவலை தெரி வித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் நாடு முன்னேறுவதாகக் கூறப்பட்டாலும், இந்தியாவில் உள்ள அடித்தட்டு குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய மிக முக்கியமான நலத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பது நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.