திருவனந்தபுரம், ஜன.9- தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு வீட்டிற்கு அருகிலிருந்து பணிபுரியும் வாய்ப்பை கேரள அரசு ஏற்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து பஞ்சாயத்துகளிலும் நவீன வேலைவாய்ப்பு மையங்களை அரசு உறுதி செய்யும். கேரள அறிவுப் பொருளாதாரத் திட்டக் கொள்கைக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பல்வேறு நிறுவனங்களுடன் கலந்துரை யாடல்கள், விரிவான திட்ட ஆவணங்கள் தயாரிப்பில் கேரள அறிவுப் பொருளாதார இயக்கம், கேரள வளர்ச்சி மற்றும் புதுமை உத்தி கவுன்சில் ஆகியவை ஈடுபட்டுள்ளன. கோவிட்டுக்குப் பிறகு 80 லட்சம் ஆன்லைன் வேலைகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் மையங்கள் விரிவுபடுத்தப்படும். இ-காமர்ஸ் முதல் மெய்நிகர், உடல், தடகள பயிற்சி வரை ‘கிக்’ என்கிற பெயரிலான இந்த மையங்களில் இருக்கும். மையத்தை நிறுவுவது தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் பொறுப்பாகும். உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பும் இருக்கும். பொறியியல் கல்லூரிகளில் மையங்கள் அமைப்பது குறித்தும் பரிசீலனையில் உள்ளது. 75 பொறியியல் கல்லூரிகளின் திறன் மேம்பாட்டு திட்ட உட்கட்டமைப்புகளை இதற்காக பயன்படுத்தலாம். வீட்டிற்கு அருகில் வேலை என்றால் என்ன? பிற மாநிலங்களிலும் வெளிநாட்டிலும் பணிபுரிபவர்கள் அனைத்து வசதிகளுடன் பணிபுரியும் பொது மையங்களே ‘வீடுகளுக்கு அருகில் வேலை’ மையம். இது ஒரு பரவலாக்கப்பட்ட வேலைவாய்ப்பு மையமாக செயல்படும். இவை பெரிய நிறுவனங்களின் ‘கிச்சன்’ மையங்களாக இருக்கும். தடையில்லா மின்சாரம், இணையதளம், மருத்துவ வசதி, உணவு வழங்கப்படும். நிறுவனங்கள் தங்கள் சொந்த பிராண்டின் கீழ் பொது தொழிலிடத்தையும் திறக்கலாம். விளையாட்டுப் பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவையும் உறுதி செய்யப்படும். தொழிலாளர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் பெறும் வாடகையே இதற்கான வருவாயாகும்.