கழிவறை தொட்டியில் இறங்கிய நான்கு தொழிலாளர்கள் பலி
புதிதாக கட்டப்பட்ட கழிவறை தொட்டியில் இறங்கிய நான்கு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கட்வா மாவட்டத்தில் நவாடா கிராமத்தில் புதி தாக கட்டப்பட்ட கழிவறைத் தொட்டியின் உள் பலகைகளை அகற்றும் பணி நடந் துள்ளது. முதலில் மேஸ்திரியான ராம் என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவர் வெளியே வரவில்லை. இதனால் அவரைத் தொடர்ந்து ராஜு சேகர், அஜய் சவுத்ரி, சந்திரசேகர் என மூன்று தொழிலாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே இறங்கியுள்ளனர். நால்வருமே வெளியே திரும்ப வில்லை. இதையடுத்து, கிராம மக்கள் சென்று பார்த்த போது அந்த குழிக்குள் நான்கு பேரும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நால்வரையும் தொட்டியிலிருந்து வெளியே மீட்டு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் நால்வரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடல்கள் பிரேத பரிசோத னைக்காக அனுப்பப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், தொட்டி யில் நிரம்பியிருந்த விஷவாயு காரணமாக நால்வரும் மூச்சுத்திணறி உயிரிழந்திருக் கலாம் என தெரியவந்துள்ளது. பாது காப்பு வழிமுறைகள் முறையாக பின்பற் றப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.