states

நான்கு மாநில இடைத்தேர்தல்: பாஜக படுதோல்வி

புதுதில்லி, ஏப்.16- நான்கு மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக ஒரு தொகு தியில்கூட வெற்றி பெறவில்லை. இது பாஜக-விற்கு பேரதிர்ச்சியாக உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உபி. மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி யைப் பிடித்தது. இந்த வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொ லிக்கும் என்று பாஜகவினரும், அரசி யல் விமர்சகர்களும் கூறிவந்தனர். இந்த நிலையில், பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநிலங்களில் இடைத்தேர்தல் அண்மையில் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டன. மேற்குவங்கத்தில் பாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்த லில் திரிணாமுல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றிபெற்றுள்ளார். பாஜகவில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு வந்தவர் பாபுல். இவர் பெற்ற வாக்குகள் 51,199. (49.69 சதவீதம்) இரண்டாவது இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிடித்துள்ளது.  கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சாய்ரா ஷா ஹலீம் 30,971 வாக்குகள் (30.06 சதவீதம்) பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் 13,174 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 5,205 வாக்குகளையும் பெற்றனர். மூன்றாவது இடத்திற்கு பாஜக தள்ளப்பட்டது.  

சத்தீஸ்கர் மாநிலத்தில் கைரா கர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பா ளர் யசோதோ நிலாம்பர் வர்மா தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கோமல்ஜங்கலை 20,176 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  மகாராஷ்டிராவில் கோலாப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜாதவ் ஜெயஸ்ரீ சந்திரகாந்த் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக  வேட்பாளர் சத்யஜித் கடமை 19,307 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பீஹாரில் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் வெற்றி பெற்று ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சி யைக் கொடுத்துள்ளது. பக்சோஹன் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபிகுமாரியை ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் அமர்குமார் பஸ்வான் 36,653 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேற்குவங்கத்தில் அசன்சால் மக்களவைத் தொகுதியில்  திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்கா வெற்றி பெற்றுள்ளார்.