states

img

குஜராத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்

குஜராத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் பறிமுதல்

காற்றில் பறந்த மதுவிலக்கு

பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனாலும் அம் மாநிலத்தில் ரூ.1.19 கோடி வெளிநாட்டு மதுபானம் சிக்கியுள்ளது கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திரநகர் மாவட்டத்தின் கெர்டி கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள பண்ணை வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காந்திநகர் மாநில கண்காணிப்புக் குழுவிற்கு ரகசி யத் தகவல் கிடைத்தது. உடனடியாக அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 1,000 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 8,596 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர். இந்த மதுபானங்களின் மதிப்பு மட்டும் ரூ.1.19 கோடி என செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மதுபானங்கள் மற்றும் கடத்த லுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் உட்பட மொத்தம் ரூ.1.26 கோடி மதிப்பி லான பொருட்களும் பறிமுதல் செய் யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளதுடன், முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.