states

மக்களுக்கும் கூட்டாட்சிக்கும் எதிரான குற்றவியல் நடைமுறை மசோதா தாக்கல்

புதுதில்லி, ஏப்.4- குற்றவியல் நடைமுறை மசோதா- 2022-ஐ  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்களன்று அறிமுகம் செய் தார். பின்னர் அமைச்சர் கூறுகையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவு  சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தவும், தவறிழைத்து தண் டனை பெற்றவர்கள் சமூகத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பை வழங்க வும் மட்டுமே அரசு விரும்புகிறது. இந்த மசோதாவை முன்வைப்பதற்கு முன்பு  அமைச்சகம் மாநிலங்களுடன் விரிவான விவாதம் நடத்தியதாகவும்  மேலும்  குற்ற வாளிகளை அடையாளம் காண்பது தொ டர்பாக உலக அளவில் குற்றவியல் சட்டங்களை ஆய்வு செய்ததாகவும் கூறினார்.

குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரானது 

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி வித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பேசுகையில், குற்ற வியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 “மக்களுக்கு விரோதமானது மட்டு மல்ல, கூட்டாட்சிக்கு எதிரானது. தற்போது கொண்டுவரப்படும் புதிய சட்டத்தின் மூலம் நாட்டு மக்களை அச்சுறுத்த முடியும்.   இந்தியாவின் சிறைச்சாலை புள்ளி விவர அறிக்கை, 2020- இன் தரவுகளின் படி சிறைகளின் மொத்தக் கொள்ளளவு 4,14,033. தற்போது 4,88,511 சிறைவாசி கள்  உள்ளனர். சிறைகளில் 20 சதவீதம் பேர் அதிகமாக அடைக்கப்பட்டுள்ள னர். சிறைவாசிகளில்  தண்டனை பெற்ற வர்கள் 1,12,589 பேர்.  விசாரணைக் கைதிகள் 3,71,848 பேர், அதாவது 70 சதவீதம். இந்த 70  சதவீதம் பேரில்  பெரும்பாலானோருக்கு, அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை காலத்தை விட கூடுதல் நாட்கள் சிறை யில் உள்ளார்கள். ஆனால் ஒன்றிய  உள்துறை அமைச்சர் அதைப் பற்றி கவலைப்படவில்லை. குற்றவியல் நடைமுறை மசோதா- 2022- கொண்டு வருவதன் மூலம் காவல் துறையின் செயல்திறன் மேம் படுத்தப்படும், குற்றம் நடந்த 24 மணி நேரம், 48 மணி நேரம் அல்லது 56 மணி நேரத்தில் குற்றம் செய்தவர்களை அடை யாளம் காண முடியும் என்றும் ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். உண்மையில், இந்த மசோதா ஒரு குடிமகனின் தனி யு4ரிமை மற்றும் அடிப்படை உரிமைக ளுக்கு எதிரானது என்று தெரிவித்தார். தரவு பாதுகாப்பு மசோதா இன்னும் அவையில் தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. அதைத் தாக்கல் செய்வதற்கு முன், உள்துறை அமைச்சர் இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கு என்ன அவசரம் என்று எம்.பி.க்கள்  கேள்வியெழுப்பினர்.