states

img

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டை அணியாமல் ஆர்ப்பாட்டம்!

அகமதாபாத், மார்ச் 26- குஜராத் பாஜக அரசானது, விவ சாயிகளுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்காததைக் கண்டித்து, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டப் பேரவை வளாகத்துக்கு வெளியே அதன் பிரதான நுழைவு வாயி லில் அமா்ந்த 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள், 10 நிமிடங்களுக்கும் மேலாக தங்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். அப்போது, விமல் சூடசாமா, லலித்  வசோயா ஆகிய எம்எல்ஏ-க்கள் திடீ ரென தங்களின் சட்டையைக் கழற்றி, அரசு மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி னர். இந்த விவகாரம் சட்டப் பேரவை யிலும் விவாதமானது,  காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயலுக்கு கண்ட னம் தெரிவித்த பாஜக தலைமைக் கொறடா பங்கஜ் தேசாய், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தினார். அவருக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ அமித் சாவ்டா, “கடந்த காலங்களில் சட்டப் பேரவை வளா கத்தை பாஜக அதன் அரசியல் நோக் கங்களுக்காக பயன்படுத்தியுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.