states

img

காஷ்மீரில் இசட் பிளஸ் பாதுகாப்புடன் வலம் வந்த குஜராத் போலி அதிகாரி

புதுதில்லி, மார்ச் 20- “ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளதாக கூறப் பட்டாலும், கிரண் படேல் விவகாரத்தில் இவ்வளவு பெரிய மீறல் எப்படி ஏற்பட்டது? இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். பாஜக ஆளும் குஜராத்தைச் சேர்ந்தவர் கிரண் பாய் படேல். இவர் பிரதமர் அலு வலகத்தின், பிரச்சாரத்துறை  கூடுதல் இயக்கு நர் எனக் கூறி, ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சகல அரசு சலுகைகளையும், துணை ராணுவப்படை வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் பாதுகாப்பு புடை சூழ, இசட் பிளஸ் பாதுகாப்புடன், புல்லட்  புரூப் (குண்டு துளைக்காத) மகேந்திரா ஸ்கார்பியோ காரில் பல்வேறு இடங் களுக்கு சென்றுள்ளார். மேலும் ஸ்ரீநகரில் இசட் பிளஸ் பாதுகாப்புடனேயே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியுள் ளார். பிரதமர் அலுவலக அதிகாரி என்ற அடை யாளத்துடன் சமூக வலைத்தள கணக்கு களையும் தொடங்கி டிப் டாப் ஆக பல புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார். ‘வெரிபைடு டுவிட்டர்’ கணக்கு வைத்திருந்த படேலை டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கா னோர் பின்பற்றி வந்துள்ளனர்.

ஆட்சியர் மூலம் சிக்கிய  கிரண் படேல்

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு தனது முதல் பயணத்தின் போது  அரசு செலவில் 5 ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு பாதுகாப்பு வீரர்கள் புடை சூழ  சுற்றிய படேல், காஷ்மீரின்  தூத்பத்ரியை மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோ கனைக் கூட்டம் கூட போட்டுள்ளார். மீண்டும் ஜனவரி மாதத்தில் ஸ்ரீநகருக்கு வந்துள் ளார். சம்பவ இடத்தில் இருந்த ஸ்ரீநகர் மாவட்ட ஆட்சியருக்கு சந்தேகம் ஏற்பட்டு, பிரதமர் அலுவலகத்தின் மூத்த பாதுகாப்பு அதி காரி குறித்து போலீசாரிடம் விசாரித்துள் ளார். போலீசார் உளவுத்துறை அதிகாரி களுக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பி கிரண் படேல் குறித்து விசாரித்துள்ளனர். கிரண் படேல் என்பவர் பிரதமர் அலுவலக அதிகாரி இல்லை எனவும், அவர் ஒரு மோசடி நபர் என உள வுத்துறை அதிகாரிகள் கூற, இந்த விவ காரத்தை ரகசியமாக வைத்திருந்த ஸ்ரீநகர் போலீசார், 3-வது முறையாக மீண்டும் ஸ்ரீநகர் வந்த கிரண்பாய் படேலை அவர் தங்கி யிருந்த ஓட்டலில் வைத்து கைது செய்துள்ள னர். கடந்த 10 தினங்களுக்கு முன்பே இந்த  கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தா லும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார்  சிறையில் அடைத்த பிறகே இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது என பொதுவெளியில் தெரியவந்துள்ளது. 

பாஜக பொதுச்செயலாளருக்கு தொடர்பு?

இந்நிலையில், குஜராத் மாநில பாஜக பொதுச்செயலாளர் பிரதீப் சிங் வஹேலா வுடன் கிரண் பாய் படேல் தொடர்பு வைத்த தாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு  ஆதாரமாக பிரதீப் சிங், கிரண் பாய் படே லின் டுவிட்டர் செய்திகளை அதிகளவில் டேக் செய்வது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜம்மு-காஷ்மீரில் என்ன நடக்கிறது? பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் தினம் தினம் இடி முழங்கக் கூறு கிறார். பிறகு எப்படி இவ்வளவு பெரிய மீறல் ஏற்பட்டது? இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி இதற்கு மோடி அரசு பதி லளிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.