states

img

சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்க!

சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  சமூக பாதுகாப்பை உறுதி செய்க!

12ஆவது அகில இந்திய மாநாடு கோரிக்கை

அகில இந்திய சாலைப் போ க்குவரத்து சம்மேளனத் தின் 12ஆவது அகில இந்திய மாநாடு திருவனந்தபுரத் தில் ஜூலை 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து பயணி கள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களான ஆட்டோ, பேரு ந்து, டாக்ஸி, வேன், லாரி டெம்போ,  ஓலா, உபேர் போன்ற செயலி மூலம் இயங்கும் வாகனங்கள் உட்பட தனி யார் போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களிலிருந்து தேர்ந்தெ டுக்கப்பட்ட 508 பிரதிநிதிகள் மாநாட் டில் கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச் சனை குறித்து விவாதித்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் : Hவாகன ஓட்டிகளை எப்போதுமே நிரந்தர குற்றவாளியாக்க ஒன்றிய அரசு கொண்டு வந் துள்ள பாரதிய நியாய சன்கிதா 106 (1) (2)  என்ற சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். Hசிறு குறு போக்குவரத்து வாகன சேவைக்கு வேட்டு வைக்கும், கார்ப்பரேட் ஆதரவு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கை விட வேண்டும். ஆன்லைன் அப ராதம் கைவிடப்பட வேண்டும்.  Hமுறைசாரா சாலை போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தை ஒன்றிய அரசு அமலாக்க வேண் டும் உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அகில இந்திய தலைவராக ஆர்.கருமலையான் மாநாட்டில் அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேள னத்தின் அகில இந்திய தலைவராக ஆர். கருமலையான், செயல் தலை வராக சி.கே. ஹரிகிருஷ்ணன், பொ துச் செயலாளராக ஜிபன் சின்ஹா,  பொருளாளராக கே.எஸ்.சுனில் குமார் ஆகியோர் உள்ளிட்ட 35 நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழகத்திலிருந்து அ.சவுந்தர ராசன், கே.ஆறுமுகநயினார்,  எம்.சிவாஜி, வி.குப்புசாமி ஆகியோர் அகில இந்திய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். 360 பேர் கொண்ட அகில இந்திய பொதுக் குழுவும் மாநாட்டில் தேர்வு செய் யப்பட்டுள்ளது.