யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கும் அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத பந்தய செயலியான “ஒன் எக்ஸ் பெட் (1xBet)” வழக்கு தொடர்பாக (விளம்பரம்) இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் (செப்., 23), இந்தி நடிகர் சோனுசூட் (செப்., 24) ஆகிய இருவரும் தில்லியில் உள்ள தலைமைய கத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கும் செப்., 22 ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக் கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சமீபத்தில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகினர். அதேபோல் நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.