பொதுமக்களைத் தாக்கும் வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல அவசர சட்டம்'
திருவனந்தபுரம் குடியிருப்புப் பகுதிகளுக் குள் நுழைந்து மக் களை தாக்குகின்ற அல்லது அவர்களது உயிருக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்துகிற எந்த வொரு காட்டு விலங்கையும் சுட்டுக் கொல்ல அனுமதி தரும் அவசர சட்டத்திற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தலைமை வனவிலங்கு காப்பா ளருக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய வனவிலங்கு பாதுகாப்பு (திருத் தம்) மசோதா 2025 என்ற இந்த வரைவு சட்டமானது, 1972-இன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத் தில் ஒரு திருத்தமாக அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது மனி தர்களின் உயிருக்கும் பாதுகாப் பிற்கும் முக்கியத்துவம் கொடுப் பதை நோக்கமாகக் கொண்டுள் ளது என பாராட்டப்பட்டு வரு கிறது. கேரள மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கூறுகை யில், தற்போது ஒன்றிய அரசின் சட்டங்கள் மற்றும் ஒன்றிய அர சால் வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளால் (SOPs) நேரம் வீணடிக்கப்படு கிறது. இதனால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா வின் விதிகளானது அத்தகைய நடைமுறைகளை அகற்றும். மேலும் ஆபத்தான உயிரினங்க ளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் மனித உயிர்களை சமரசம் செய்யா மல், அவசர காலங்களில் விரை வான நடவடிக்கைகளை மேற் கொள்ள அது உதவும் என்று அவர் தெரிவித்தார். இந்த வரைவு மசோதா திங்கட் கிழமை துவங்க உள்ள கேரள மாநில சட்டமன்ற அமர்வில் விவா தத்திற்கு வர உள்ளது. மசோதா சொல்வதென்ன? வரைவு மசோதாவின்படி, ஒரு நபர் காட்டு விலங்கின் தாக்குத லால் கடுமையான காயமடைந் தால், மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை வனப் பாதுகாவலர் சம்ப வம் குறித்து தலைமை வன விலங்கு காப்பாளருக்குத் தெரி விக்கலாம். அதன் பிறகு, தலைமை வனவிலங்கு காப்பாள ருக்கு, நடைமுறை தாமதங்களால் பாதிக்கப்படாமல், விலங்கைக் கொல்வது உட்பட உடனடி நட வடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. மேலும், இரண்டாம் அட்ட வணையில் உள்ள காட்டு விலங்கு களின் எண்ணிக்கை கட்டுப்பாடில் லாமல் அதிகரித்தால், அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவது அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவது போன்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கவும், அவை நோய்களை பரப்பும் பட்சத் தில் “நோய்கள் பரப்பும் விலங்கு” (vermin) என அறிவிக்கவும் மாநில அரசுக்கு இந்த வரைவு மசோதா அதிகாரம் அளிக்கிறது. (இந்த அதிகாரம் தற்போது ஒன் றிய அரசிடம் மட்டுமே உள்ளது) மசோதாவின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் இது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள மாநில அரசு இனி ஒன்றிய அரசின் முன் அனுமதி கேட்டு காத்தி ருக்க வேண்டிய அவசியம் இல்லை.