10 வயது சிறுவர்களுக்கு போதைப் பொருள் பழக்கம்
பாஜக கூட்டணி ஆளும் மேகாலயா மாநில அவலம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் 10 வயதிலேயே சிறுவர்களுக்கு போதைப்பொ ருள் பழக்கம் இருப்பதாக இந்திய பொது சுகாதார இதழில் தகவல் வெளியாகியுள்ளன. ஷில்லாங் பொது சுகாதார நிறுவனம், மேகா லயா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் ஆராய்ச்சி யாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை மேற்கோள் காட்டி, இந்திய பொது சுகாதார இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், “மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ், கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ், மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் போதைப்பொருள் பயன்பாடு 10 வயதிலேயே தொடங்குகிறது என்பது தெரிய வந்துள்ளது. இது 22 வயதில் போதைப்பொ ருள் பழக்கம் உள்ள மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்களை விட மிகவும் மோசமானது ஆகும். அதிகரிக்கும் போதைப் பொருள் பயன்பாடு மேலும் ஆய்வின்படி, மேகாலயாவில் போ தைப்பொருள் பயன்பாடு பரவலாக அதி கரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளவர்களில் 91% பேர் ஆண்கள்; 9% பேர் பெண்கள் ஆவர். அவர்களில் 80% பேர் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். போதைப்பொருள் பழக்கம் உள்ளவர்கள் 10ஆம் வகுப்புக்கு குறைவான பள்ளிப் படிப்பைக் கொண்டுள் ளனர். குடும்பப் பிரச்சனைகள், மன அழுத்தம் காரணமாக நிவாரணம் தேடி போதைப்பொ ருள் பயன்பாட்டைத் தொடங்குவதற்கான முக்கியக் காரணங்களாக ஆய்வுக்கு பதில் அளித்தவர்கள் மூலம் தகவல் வெளியாகி யுள்ளது. கஞ்சாவை தவிர்த்து ஹெராயின் அடிக்கடி பயன்படுத்தப்படும் போதைப்பொருளாக உள்ளது. ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.2,000 வரை ஹெராயினுக்கு மேகாலயா வாசிகள் செலவு செய்கிறார்கள். சில சமயங்க ளில் ரூ.2,500 வரை செலவாகும் என்று ஆய்வு க்கு பதில் அளித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென் றால், சந்தைகள் மற்றும் மொபைல் அடிப்ப டையிலான பரிவர்த்தனைகள் மூலம் போதைப் பொருள் அணுகல் மிகவும் எளிதானதாக உள்ளது. மிக முக்கியமாக ஆரம்பகாலங்களில் போதைப் பொருள் பயன்பாட்டாளர்கள் கடன் வாங்குவது அல்லது பணத்தை திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். பிளாக் டைகர் மேகாலயாவில் பிளாக் டைகர், டபுள் டைகர் என்று கூறப்படும் அதி சக்தி வாய்ந்த ஹெரா யின் வகைகள் புழக்கத்தில் உள்ளன. இவை அதிக அடிமையாக்கும் தன்மை கொண்டவை ஆகும். அதனால் ஆரம்பகால போதைப்பொ ருள் பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் போக்கை நிவர்த்தி செய்வதற்கு கல்வி நிறு வனங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான அபாயம் மற்றும் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என பாஜக கூட்டணி அரசுக்கு இந்திய பொது சுகாதார இதழ் ஆய்வு மூலம் கோ ரிக்கை விடுத்துள்ளது.