states

குடியரசுத் தலைவர் தேர்தல் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல்

புதுடெல்லி, ஜூன் 23-  குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. இதை யடுத்து, ஜூலை 18-ஆம் தேதி  குடியரசுத் தலைவர் தேர்தல்  நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கியது.  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி  சார்பில் குடியரசுத் தலைவர்  தேர்தலில் ஜார்க்கண்ட் முன் னாள் ஆளுநர் திரவுபதி முர்மு (64) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இது போல காங்கிரஸ், திரிணா முல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்  னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்  வந்த் சின்ஹா போட்டியிடு வார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரவுபதி முர்மு வெள்ளியன்று (ஜூன் 24) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ட்விட்டரில், ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒடிசா வின் மகள் திரவுபதி முர்மு  போட்டியிடுகிறார். அவ ருக்கு கட்சி பாகுபாடு இல்லா மல் அனைத்து எம்.எல்.ஏ.க்க ளும் ஒருமனதாக வாக்களிக்க வேண்டும்’’ என பதிவிட்டுள்ளார்.