இந்தியாவில் டி.ஜே. இசையே மாரடைப்புக்கு காரணம் ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
மூனிச் நாட்டில் திருமண நிகழ்ச்சி கள், விழாக்களில் தற் போது டி.ஜே. இசையுடன் (டிஸ்க் ஜாக்கி இசை - அதிக சப்தம் கொண்டது) நடனமாடுவது புதிய கலாச்சாரமாக மாறிவிட்டது. வடமாநிலங்களில் இது முக்கிய நிகழ்வாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் டி.ஜே. இசை நடன நிகழ்வு ஒரு கலாச்சார நிகழ்வு போல விரிவடைந்து பிரபல நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் இந்த டி.ஜே. இசை நடன நிகழ்வில் பங்கேற்கும் நபர் கள் அடிக்கடி உயிரிழப்பது வாடிக் கையான சம்பவமாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடன மாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அதே சமயத்தில் கேரளாவிலும் ஒரு இளைஞர் உயிரிழந்தார். இது போன்று நாட்டில் டி.ஜே. இசை நடன நிகழ்வில் மாரடைப்பு மர ணம் மிக மோசமான அளவில் அதிக ரித்து வருகிறது. இந்த மாரடைப் புக்கு கொரோனா தடுப்பூசி ஒரு கார ணம் என்று கூறப்பட்டாலும், இது தவ றானது என ஐசிஎம்ஆர் மறுப்பு தெரி வித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் டி.ஜே. இசையே மாரடைப்புக்கு கார ணம் என ஜெர்மனியில் உள்ள மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத் துவ மையம் ஆய்வு மூலம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை யில்,”டி.ஜே. இசை ஒலிகளின் விளைவுகள் குறித்து இளைஞர் கள் முதல் பெரியவர்கள் வரை 15,000 பேரிடம் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இந்த ஆய்வின் போது டி.ஜே. இசை ஒலிகள் போன்ற எந்தவொரு இசையும் ஒரு குறிப் பிட்ட வரம்பை மீறினால், இதயத் துடிப்பு மாறுவது கண்டறியப்பட் டது. மக்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது. மார டைப்பு மற்றும் மூளை பக்கவாதத் தால் இறக்கும் அபாயமும் உள் ளது. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உடனடியாக மாரடைப்பு ஏற்படலாம். 100 டெசி பலுக்கு மேல் ஒலிகளை நீண்ட நேரம் கேட்டால் காது கேட்கும் பிரச் சனைகள் ஏற்படும். சிறு குழந்தை களுக்கு மெல்லிய உள் அடுக்கு கள் சேதமடைந்து நிரந்தர காது கேளாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம். டி.ஜே. இசை சத்தங்கள் கர்ப்பிணி பெண்களைப் பாதிக் கின்றன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. ஒலி மாசுபாட்டால் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். அதனால் டி.ஜே. இசை சத்தங்கள் ஒலிக்கும் இடங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.