states

img

நாங்கள் சமூகநீதிக்காக போராடுகிறோம் பாஜக இந்துத்துவத்தை பேசுகிறது!

அனுப்பிரியா படேல் அதிரடி

லக்னோ, பிப்.8- உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட் டணியில் இருக்கும் கட்சிகளில் முக்கிய மானது அப்னாதளம் (சோனேலால்) கட்சி யாகும். ஒன்றிய இணையமைச்சராக இருக்கும் அனுப்பிரியா படேல் தலைமை யிலான இந்தக் கட்சி, இதர பிற்படுத்தப் பட்ட மக்களிடையே செல்வாக்குப் பெற்றது.  உ.பி. பாஜக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் கூட இல்லாத நிலையில், அதன் கூட்டணியில் இருக்கும் அப்னா தளம் கட்சி ஹைதர் அலி கான் என்ற முஸ்லிம் இளைஞரை, தனது வேட்பாள ராக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சித் தலைவர் அனுப்பிரியா படேலிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அப்னா தளம் (எஸ்) கட்சியின் கொள்கைகள் வேறு; பாஜகவின் கொள் கைகள் வேறு என்று பதிலளித்துள்ளார். “ஒரு வேட்பாளரை, ஏன் அனைவரும் மதம் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க் கின்றனர் என்பது எனக்குத் தெரிய வில்லை. ஹைதர் அலி கான், படித்த - நம்பிக்கைக்குரிய இளைஞர். வேட்பா ளர்களை மதரீதியான கோணத்தில் எனது கட்சி பார்ப்பதில்லை. எனது கட்சி யைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தீண்டத்தகாதவர்கள் அல்ல!” என்று கூறி யுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “பாஜக கூட்டணியில் உள்ளதால், இந்துத்துவா குறித்தும், பாஜக குறித்தும் என்னிடம் பலர் தொடர்ந்து கேட்கிறார்கள். உண் மையில் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அதிலி ருந்து விலகியே நிற்கிறேன். எனது கட்சி மதவாதக் கட்சி அல்ல, மத அரசியல் செய்யும் கட்சியும் அல்ல. நாங்கள் பாஜக விடமிருந்து வேறுபட்டவர்கள். சமூக நீதிக்காக எங்களது கட்சி போராடி வரு கிறது. அதுதான் எங்களது கொள்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.