புதுதில்லி, மார்ச் 28 - 1990 காலகட்டத்தில் பயங்கர வாதிகளின் தாக்குதல் மற்றும் மிரட்டல் காரணமாக, காஷ்மீரி லிருந்து வெளியேறிய பண்டிட்டு களின் துயரத்தைப் பதிவு செய்கிறோம் என்ற பெயரில், விவேக் அக்னிஹோத்ரி இயக் கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப் படம் தற்போது நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தப் படம், பண்டிட்டுகளின் துயரத்தை சொல்வதைக் காட்டிலும், இஸ்லாமியர்க்கு எதிரான வெறுப்பு அரசியலையே பேசு கிறது என்று கடுமையான விமர் சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி வரை, அத்தனை பாஜக-வினரும் இந்தப் படத்தை தீவிரமாக விளம் பரம் செய்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்கள் வரி விலக் கும் அறிவித்துள்ளன. இதேபோல தில்லி அரசும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று அண்மையில் அந்தக் கட்சி யின் எம்எல்ஏ-க்கள் சட்ட மன்றத்தில் கோரிக்கை விடுத்த னர். அப்போது பதிலளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தி காஷ்மீர் பைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி யிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு பாஜக-வினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும். வரி செலுத்த வேண்டிய அவசியமே இருக்காது” என்று கிண்டலடித் திருந்தார். தற்போது மீண்டும் அவர் பாஜகவை விமர்சித்துள்ளார். “காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் வெளியேற்றப் பட்ட இந்த 25 ஆண்டுகளில், பாஜக 13 ஆண்டுகள் ஒன்றிய அர சில் இருந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ளது. இத்தனை ஆண்டுகளில் காஷ்மீர் பண்டிட்டு கள் மீண்டும் காஷ்மீர் திரும்ப என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது வரை ஒரு பண்டிட் குடும்பம் கூட அங்கு திரும்பியதாகத் தெரிய வில்லை. ஒரு படத்தில் யாரு டைய துயரையோ ஆவணப் படுத்தி அதன் மூலம் பாஜக ஆதா யமும், பணமும் ஈட்டிக் கொண்டி ருக்கிறது. இது ஒரு குற்றம். இதனை தேசம் பொறுத்துக் கொள் ளாது” என்று கூறியுள்ளார்.