வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பில் சிபிஎம் பிரதிநிதிகள் குழு ஆய்வு
கடந்த 30 ஆண்டுகாலம் இல்லாத அளவில் பஞ்சாப் மாநிலம் கனமழை வெள்ளத்தால் உருக்குலைந்துள்ளது. மாநிலம் முழுவதும் 37 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. விவசாய நிலங்கள் உடனடியாகச் சீரடைய முடியாத அளவில் குளங்களாக மாறியுள்ளன. இதனால் பஞ்சாப் மக்கள் இயல்புநிலை இழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் பகுதிகளில் செப்., 27 முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் அம்ரா ராம் எம்.பி., விஜூ கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பிரதிநிதிகள் குழு அமிர்தசரஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குச் சென்று, கிராம மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடியது. இக்குழுவினருடன் பஞ்சாப் மாநிலச் செயலாளர் சுக்விந்தர் சிங் செகோன் மற்றும் பிற தலைவர்களும் பங்கேற்றனர்.
