states

மேற்பனைக் காட்டில் திட்டமிட்டு மதக்கலவரத்தை உருவாக்கும் எச்.ராஜா

புதுக்கோட்டை, ஏப்.7-  புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக் காட்டில் ஒற்றுமையாக வாழும் மக்களி டையே திட்டமிட்டு மதமோதலை உரு வாக்கத் துடிக்கும் பாஜக நிர்வாகி எச்.ராஜா மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யை அடுத்துள்ளது மேற்பனைக்காடு கிராமம். இங்கு இந்து, இஸ்லாமியர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் காலம் கால மாக ஒன்றுமையுடன் சகோதர, சகோதரி களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.  இங்கு முகமது அலி என்பவரின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். அவரது நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்டி, ஏழை, எளிய மக்களுக்கான அறக்கட்டளையாக நிர்வகிக்க முகமதுஅலி திட்டமிட்டார்.

அதன்படி மேற்பனைக்காடு ஊராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று கட்டிடம் ஒன்றைக் கட்டி வருகிறார். அனுமதி பெற்றபோது இருந்ததைவிட சற்று மாறுதலாக கட்டிடத்தை கட்டி முடிக்க நினைத்த முகமது அலி அதற்கான அனுமதியையும் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளார். இந்நிலையில், அந்தக் கட்டிடம் தொழுகை நடத்துவதற்கான மசூதி எனக்கூறி சில சமூக விரோதிகள் திட்டமிட்டு பொய்ப்பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். மேலும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சில தினங்களுக்கு முன்பு அங்கு வந்து மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளார்.  இக்கட்டிடத்தை இடிப்பதாகக் கூறி  ஊர்வலமாகச் சென்றுள்ளார். அப்போது, அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை யினரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவ தாகவும் பேசிய அவர் மாவட்ட ஆட்சியர்  உள்ளிட்ட அதிகாரிகளையும் தரக்குறை வான வார்த்தைகளால் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். எச்.ராஜாவின் செயல் அரசியல் சாசனத் திற்கும், இந்திய இறையாண்மைக்கும் எதி ரானது. ஒரு அறக்கட்டளையை உருவாக்கி ஏழை, ஏளிய மக்களுக்கு உதவ நினைத்த ஒரு இஸ்லாமியப் பெரியவரை திட்டமிட்டு திசைமாற்றி வம்புக்கு இழுத்துள்ளார்.

 வேண்டுமென்றே அமைச்சரையும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை யும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதோடு ஒன்றுமையாக வாழ்ந்துவரும் மேற்பனைக்காடு மக்களிடையே பிளவை உருவாக்கி கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு செயல்பட்ட எச்.ராஜா மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் எச்.ராஜா மீது தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சமூகப் பதற்றத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் எச்.ராஜா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தி கீரமங்கலம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் புகார் தெரி வித்துள்ளார்.