states

சீனாவுடன் மோதல் அவசியமில்லை பைடனுக்கு திடீர் ஞானோதயம்

வாஷிங்டன், ஜன.22- சீனாவுடன் மோதல் போக்கைக் கடைப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவுக்கு எதிரான தடைகள், அணி திரட் டல்கள், கண்டன அறிக்கைகள், பொய்க் குற்றச்சாட்டுகள், வதந்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட வேலைகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் திடீரென்று சீனாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்  டிய அவசியமில்லை என்றும், அதற்கு மாறாக, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ரீதி யான போட்டி இருக்கலாம் என்றும் ஜோ பைடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அமெரிக்கா-சீனா உறவில் தேவையற்ற மோதல் கடைப்பிடிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள பைடன், “சொல்லப் போனால், நான் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங்கிடம் இதை உறுதியாகத் தெரிவித்து விட்டேன்.

நாம் மோதிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் போட்டி போட்டுக் கொள்ளலாம். போட்டியில் இறங்குவதற் கும், பதட்டங்களைத் தணித்துக் கொள்ள வும் அமெரிக்கா உதவத் தயாராக உள் ளது” என்றார். சில நாட்களுக்கு முன்பாக, சீனாவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கப் போர்க் கப்பல் புகுந்ததும், அதை எச்சரித்து சீனா விரட்டியடித்ததும் செய்தியாக வெளியாகி இருந்தது. மோதல் போக்குகள் அதிகரித்து வந்ததைத்தான் அண்மைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. மேற்குப்பகுதியில் ரஷ்யா வுக்கு எதிராகவும், கிழக்கில் சீனாவுக்கு எதி ராகவும் அணிதிரட்டல்கள் பெரும் அளவில் அதிகரித்திருந்தன.  நவம்பர் 2021 இல் இணையவழி உச்சி மாநாடு நடந்தது. இதில் தைவான், பனிப் போருக்கான வாய்ப்பு, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் வடகொரியாவில் உள்ள நிலைமை, கொரோனா உள்ளிட்ட விவ காரங்கள் விவாதிக்கப்பட்டன. நிலைமை சுமூகமாகி விட்டது என்று எதிர்பார்த்த நிலை யில், குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரி களை அனுப்பாமல் புறக்கணிப்பதாக அமெ ரிக்கா அறிவித்தது. தற்போது மீண்டும், ஜோ பைடனின் மோதல் போக்கு வேண்டாம் என்ற அறிவிப்பு அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

;