states

img

பத்திரிகை சுதந்திரத்தின் மீது கொலை பாதகத் தாக்குதல்  குற்றச்சாட்டுக்களே குறிப்பிடாமல் பத்திரிகையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை

பத்திரிகை சுதந்திரத்தின் மீது கொலை பாதகத் தாக்குதல்  குற்றச்சாட்டுக்களே குறிப்பிடாமல் பத்திரிகையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை

இந்திய மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பர் ஆகியோர் மீது எந்த குற்றச்சாட்டுகளை யும் குறிப்பிடாமல் புதிய குற்றப்பத்திரிகை யை பதிவு செய்துள்ளது அசாம் மாநில காவல் துறை. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.  இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் (PCI), இந்தியப் பெண் பத்திரிகையாளர் சங்கம் (IWPC), பத்திரிகை ஆசிரியர்கள் மன்றம் (Editors Guild) உள்ளிட்ட பத்திரிகையாளர் மன்றங்கள் இந்த சம்பவத்திற்கு கடுமை யான எதிர்ப்பையும் கண்டனங்களையும் தெரி வித்துள்ளன.  ஆபரேசன் சிந்தூர் தொடர்பான கட்டுரை வெளியிட்டதற்காக ‘தி வயர்’ செய்தி தளத்தின் மூத்த பத்திரிகையாளர்களான சித்தார்த் வரத ராஜன், கரண் தாப்பர் ஆகியோருக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 152-இன் கீழ் அசாம் காவல்துறையின் குற்றப் பிரிவு, தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.  இவ்வழக்கு பதிவுக்கு எதிராக பத்திரிகை யாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள்,  இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். பழிவாங்கும் நடவடிக்கை இது கடந்த இரு மாதங்களில் அசாம் காவல்துறையால் ‘தி வயர்’ செய்தித்தளம் மீது தொடரப்பட்ட இரண்டாவது வழக்காகும். இந்த நடவடிக்கை பத்திரிகையாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகள், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கொலை பாதகத் தாக்கு தல் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  2025 ஜூலை 11, அன்று அசாம் மாநில காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (0181/2025) தொடர்பான வழக்கில், 2025 ஆகஸ்ட் 12, அன்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூர்யா காந்த் மற்றும் ஜோய் மால்யா பக்ஜி அடங்கிய அமர்வானது  சித்தார்த்  வரதராஜன் உள்ளிட்ட ‘வயர்’ இதழின் எந்தப் பத்திரிகையாளர்கள் மீதும்  எந்தவிதமான கட்டாய நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என பாதுகாப்பு அளித்திருந்தது.  இந்நிலையில் அவர்களை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என பாஜகவின் அசாம் மாநில காவல்துறை மீண்டும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் பத்திரிகையாளர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டையும் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சித்தார்த் வரதராஜன், கரண் தாப்பர் ஆகியோர் ஆகஸ்ட் 22 அன்று அசாம் மாநில குற்றப் பிரிவில் உள்ள விசாரணை அதிகாரி முன் நேரில் ஆஜராகுமாறு அசாம் மாநில காவல் துறை பிஎன்எஸ் பிரிவு 152 இன் கீழ் சம்மன் அனுப்பியுள்ளது. அவ்வாறு விசாரணை அதிகாரி முன் ஆஜராகத் தவறினால் கைது செய்யப்படுவீர்கள் என்று அந்தச் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. “பிஎன்எஸ் பிரிவு 152 ஊடக சுதந்திரத்தை தாக்கும் ஆயுதம்” இந்தியப் பத்திரிகையாளர் மன்றம், இந்தியப் பெண் பத்திரிகையாளர் சங்கம், பத்திரிகை ஆசிரியர் குழு ஆகிய அமைப்புகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் 2022 மே மாதம், பழைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ-இன் கீழ் தேசத்துரோக வழக்குகளை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152 ஆனது பழைய பிரிவு 124 ஏ-இன் மறுவடிவமாக உள்ளது.  இதனை குறிப்பிட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய பிரிவு 152 ஆனது ஊடக சுதந்தி ரத்தின் மீதும் இந்தியாவின் ஊடகங்களின் மீதும் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் கரு வியாக மாறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளன.   மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1) ஏ-இன் கீழ் வழங்கப்பட்ட கருத்துச் சுதந்தி ரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த “கொடு மையான” பிரிவு 152-ஐ நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன.  பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு முகமைகள் மூலமாக சட்டத்தின் பல பிரிவுகளைப் பயன் படுத்தி பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல வழக்குகளை தொடர்ச்சியாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வருகிறது.  குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு நோட்டீஸ்கள், சம்மன்கள் அனுப்புவது விசார ணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அலைக் கழிப்பது, வீட்டு சிறை வைப்பது, காரணமே இன்றி நீண்டகாலம் சிறையில் அடைத்து வைப்பது என பல கொடுமையான தண்டனை களை அரங்கேற்றி பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாக முடக்கி வருகிறது.  குறிப்பாக 2022ஆம் ஆண்டில் நிறுத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட கொடுமையான தேசத்துரோகப் பிரிவின் மறுவடிவமான, பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152-ஐப் பயன்படுத்தியிருப்பது பத்திரிகை சுதந்தி ரத்தின் மீதான கொலை பாதகத் தாக்குதல் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.