states

img

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றம்

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் மாற்றம்

எதிர்க்கட்சிகளின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுக்கு இடையே தபால் வாக்குகள் எண்ணும் நடை முறையில் மாற்றம் செய்யப்பட உள்ள தாக இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாக்குப்பதிவு இயந்திரத்தின் கடைசி 2 சுற்றுக்கு முன்பாக தபால் வாக்குக ளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும்.  அதாவது 20 சுற்றுகள் இருந்தால் 18ஆவது சுற்று முடிவில் தபால் வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான். கடைசி 2 சுற்று வாக்குகள் எண்ண வேண்டும். நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும்” என அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.