states

img

புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் உயர்கல்வி கவுன்சிலில் மாற்றங்கள்

புதுதில்லி, மார்ச் 22- புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்திய உயர் கல்வி கவுன்சிலின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு,  ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துகொண்டிருக்கிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், பல்கலைக்கழக மானியக்குழு வின் செயல்பாடுகளுக்குப் பதிலாக இந்திய உயர் கல்வி கவுன்சிலின் செயல்பாடுகளில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்கார் பதிலளித்தார்.  அதில் “2020ஆம் ஆண்டு புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில், இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட இருப்பதாகவும், அதன்கீழ் நான்கு அமைப்புகள் தனித்தனியே செயல்படும் என்றும், இந்திய உயர்கல்வி ஆணையம் நிறுவுவதற்கான சட்டமுன்வடிவு தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

;