புதுதில்லி, பிப். 10 - பெருந்தொற்றிலிருந்து எந்தப் பாடமும் பெற்றுக் கொள்ளாத மோடி அரசு வேலைவாய்ப்பு உருவாக்காத - ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றுகிற ஒரு பூஜ்ஜிய பட்ஜெட்டையே தாக்கல் செய்துள்ளது என்றும் இது மோசடிகளின் மூட்டை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் சாடினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்கள வையில் அதன்மீதான விவாதத்தில் பி.ஆர்.நடராஜன் பேசியதாவது: பட்ஜெட் 2022 - 23 பொதுத்துறை நிறுவனங்களை வலிமைப்படுத்தும் மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை நாட்டில் உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. விலையேற்றத்தை தடுக்க எதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
விவசாயிகளுக்கு வஞ்சகம்
குறைந்த பட்ச ஆதரவு விலை பற்றி நிதி அமைச்சரின் உரையில் குறிப்பிடக்கூட இல்லை. பட்ஜெட் 2022 பேரழிவுகள் மற்றும் மோசடிகள் நிறைந்த மூட்டையாக உள்ளது. முந்தைய வருடங்களோடு ஒப்பிடுகை யில், இந்த பட்ஜெட்டில், நெல் மற்றும் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆத ரவு விலைக்கான ஒதுக்கீடு குறை வாகவே உள்ளது. நிதி அமைச்சர் பெரு மையாக ரூ.2.37 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள் ளார். ஆனால், கடந்த வருடத்தில் உண்மையான செலவு ரூ.2.48 லட்சம் கோடிகளாகும்.
விவசாயிகளுக்கான அனைத்து பெரிய திட்டங்களுக்கான ஒதுக்கீடு களும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப் பட்டுள்ளன. சட்டப்படி உறுதியளிக்கப் பட்ட குறைந்த பட்ச ஆதரவு விலைக் காக விவசாயிகள் போராடிக் கொண்டி ருக்கும் வேளையில், இந்திய உணவுக் கழகத்திற்கான கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பரவலாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கொள்முதலுக்கான ஒதுக்கீடு ஆகி யவை 28% அளவுக்கு குறைக்கப் பட்டுள்ளது. உர மானியத்திற்கான நிதி ஒதுக்கீட்டளவு 25% வரை குறைக்கப் பட்டுள்ளது. பிரதம மந்திரி கிஸான் திட்டத் தின் கீழ், 12.5 கோடி விவசாயக் குடும்பஙு களுக்கு, குடும்பத்திற்கு ரூ.6000 வீதம், ஆதரவாக உதவ, ரூ.75000 கோடி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. ஆனால், பட்ஜெட்டில் ரூ.68000 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடும், ரூ.500 கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கள் தெளிவாக குறிப்பிடுவது என்ன வென்றால், 2022 - 23 ஒன்றிய பட்ஜெட், விவசாயிகளுக்கு விரோதமானது, ஒன்றிய அரசு விவசாயிகளை மீண்டும் ஏமாற்றிவிட்டது என்பதே ஆகும்.
பெருந்தொற்றில் இருந்து பாடம் கற்கவில்லை
நடப்பு ஆண்டோடு ஒப்பிடுகையில் 2022-23 பட்ஜெட்டில் தடுப்பூசிகளுக் கான சமூகநல திட்டங்களுக்கு உண் டான ஒதுக்கீடுகூட குறைவாகவே உள்ளது. ஒட்டுமொத்த பெருந்தொற்று பிரச்சனையிலிருந்து ஒன்றிய அரசு எந்த பாடத்தையும் எடுத்துக் கொள்ள வில்லை எனத் தெரிகின்றது. சமீபத்திய அனைத்து வருடங்களிலும் ஒன்றிய அரசு மிகக்குறைந்த அளவு ஒதுக்கீட்டு செலவினைக்கூட குழந்தைகள் நலத்திற்கென செய்யவில்லை. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்ததைவிட குழந்தை கள் நலத்திற்கான திருத்தி மதிப்பிடப்பட்ட செலவானது ரூ. 5700 கோடி குறைவாகும். பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் அழிவுகர மான விளைவுகளிலிருந்து தங்களை ஈடுகட்டிக் கொள்ள குழந்தைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் செய்யப்படவில்லை.
வேலைவாய்ப்புகள் எங்கே ?
ஒன்றிய பட்ஜெட் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கும் என்று நாடு எதிர்பார்த்தது. தற்போது இந்தியா 20 கோடி வேலைகளை இழந்துள்ளது. ஆனால் நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதிக்கான அறிவிப்பு ஏது மில்லை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 50 வருடங்களில் தற்போதுதான் மிக மோசமாக உள்ளது. பெருந் தொற்றால் மக்கள் அழிவுக்கு உள்ளாக்கப்படுவதோடு பட்ஜெட்டால் முற்றிலுமாக ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் இவர்களுக்கு ‘பூஜ்ய பட்ஜெட்’ என்பதால் இதில் வேலைவாய்ப்பு களை உருவாக்கக்கூடிய எந்த பார்வையும் பிரதிபலிக்கப்படவில்லை. அடிக்கடி உயர்கின்ற பெட்ரோலியப் பொருட்களின் விலையானது குடும்பங்களை நிலைகுலைய வைத்துள்ளது. கலால் வரி குறைக்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு சிறிது நிவாரணத்தை அளித்திருக்கும். கடந்த இரண்டு வருடங்களாக, சமையல் எரி வாயு மானியம் பெரிய அளவில் வெட்டப் பட்டு இருக்கிறது. கடந்த வருடம் மானிய நிதி ஒதுக்கீடு 60% குறைக்கப்பட்டது. மற்றொரு 60% குறைப்பு 2022-23 பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்றிய பட்ஜெட்டானது மோடி அரசின் பணக்கார நண்பர்களின் விருப்பங் களை பாதுகாக்கக்கூடியதாக மட்டுமே உள்ளது. கடந்த இரண்டு வருட பெருந் தொற்றுக் காலத்தில் செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகியுள்ளனர். ஆக்ஸ்பாம் கணிப்பின்படி இந்தியாவின் மகாகோடீஸ்வர குடும்பங்களின் சொத்து மதிப்பு 2021ல் உச்சத்தை அடைந்துள்ளதாக பதிவாகி யுள்ளது. செல்வந்தர்களான முதல் பத்து சதவீத இந்திய மக்கள் 57% வருமானத்தை வைத்திருக்கிறார்கள். இருப்பினும் இவர்களுடைய உயர்ந்த லாபத்தின் மீது வரி விதிக்க எந்த முன்மொழிவும் அரசிடம் இல்லை என்பதோடு இந்த வரிவிதிப்பினால் கிடைத்திருக்கக்கூடிய வளங்களை கஷ்டப்படுகின்ற அதிக பெரும்பான்மையான மக்களுக்கு நிவாரணமாக வழங்கலாம் என்ற முன்மொழிவும் அரசிடம் இல்லை. மேற்சொன்ன கருத்துகளின்படி 2022-23 பட்ஜெட்டானது பொது மக்களுக்கு நிவார ணம் அளிப்பதற்கான முன்னுரிமை வழி களை அடையாளம் காணுவதில் முற்றிலு மாக தோல்வியடைந்துவிட்டது. இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறினார். (ந.நி.)