states

துரோகிகளான முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை ஒன்றிய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

துரோகிகளான முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை ஒன்றிய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஒன்றிய ஜவுளித்துறை அமைச்ச ராக இருப்பவர் கிரிராஜ் சிங்.  இவர் பீகார் சட்டமன்ற தேர்தலை யொட்டி அர்வால் தொகுதி பாஜக வேட்பா ளரை ஆதரித்து சனிக்கிழமை அன்று, “ஒருமுறை நான் ஒரு இஸ்லாமிய மத குருவிடம் ஆயுஷ்மான் பாரத் சுகாதார  அட்டை உள்ளதா என்று கேட்டேன். அவர்  உறுதிமொழியில் பதிலளித்தார். அத்த கைய அட்டைகள் இந்து-முஸ்லிம்  அடிப்படையில் விநியோகிக்கப்படு கிறதா என்று கேட்டேன், அவர் எதிர்மறை யாக பதிலளித்தார். எனக்கு வாக்களித் தீர்களா என்று நான் அவரிடம் கேட்ட போது, அவர் ஆம் என்று பதிலளித்தார். ஆனால் நான் அவரை கடவுள் மீது சத்தி யம் செய்யச் சொன்னபோது, அவர் செய்யவில்லை. சரி, நரேந்திர மோடிக்  காவது வாக்குகளைச் செலுத்தினீர்களா? என்ற போதும் இல்லை என்று தான் பதில் வந்தது. முஸ்லிம்கள் அனைத்து மத்திய திட்டங்களின் நன்மைகளையும் பெறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு  வாக்களிப்பதில்லை. அத்தகையவர்கள்  துரோகிகள் என்று அழைக்கப்படு கிறார்கள். அந்த துரோகிகளின் வாக்கு கள் நமக்கு தேவையில்லை” என சர்ச்சைக்குரிய வகையில் கூறினார். கிரிராஜ் சிங்கின் இந்த அடாவடி பேச்சுக்கு நாடு முழுவதும் கட்டணம் குவிந்து வருகிறது.