states

img

மேற்குவங்கத்தில் ஆதீனா மசூதி மூலம் வன்முறையை கிளப்ப பாஜக தீவிரம்

மேற்குவங்கத்தில் ஆதீனா மசூதி மூலம் வன்முறையை கிளப்ப பாஜக தீவிரம்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,யுமான யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு,”மேற்குவங்கத்தின் மால்டாவில் உள்ள ஆதீனா மசூதி, 14ஆம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி  வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாள ரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட் டப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மசூ தியாகும். கி.பி 1373-1375இல் கட்டப்பட்ட இந்த மசூதி அந்த காலத்தில் இந்திய  துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மசூதி யாக இருந்தது. இது இப்பகுதியின் கட்டி டக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்து கிறது” என்று தெரிவித்தார். யூசுப் பதானின் இந்த பதிவை பகிர்ந்த  மேற்குவங்க பாஜக,”இது ஆதீனா மசூதி  அல்ல ஆதிநாத் கோவில்” என்று  சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள் ளது. பாஜகவின் இந்த பேச்சுக்கு ஆதீனா  மசூதி நிர்வாகம், முஸ்லிம் அமைப்பு கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்குவங்கத்தில் அடுத்தாண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், ஆதீனா மசூதி மூலம் வன்முறை யை கிளப்ப பாஜக சதித்திட்டம் தீட்டி யுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.