5,000 பள்ளிகளை மூடும் பாஜக அரசு
உ.பி., மாநிலத்தில் எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.
லக்னோ பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலத்தில் 5,000 பள்ளிகளை மூடும் ஆதி த்யநாத் அரசாங்கத்தின் நடவடிக் கைக்கு எதிராக திங்களன்று மாவட்ட மையங்களில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆர்ப் ்பாட்டம் நடத்தியது. சுல்தான்பூரில் நடைபெற்ற போராட்டத்தை எஸ் எப்ஐ அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சஜி தொடங்கி வைத்தார். 5,000 அரசுப் பள்ளிகளை மூடும் பாஜக அரசின் நடவடிக்கை பரவ லான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட உ.பி. பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைப்பதே அரசின் திட்டம் ஆகும். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட அரசுப் பள்ளிகளில், சுமார் 29,000 பள்ளிகளில் 50க்கும் குறை வான மாணவர்களே உள்ளனர். அனைவருக்கும் கல்வி என்ற அடிப் படை இலக்கை உறுதி செய்வதில் உ.பி. பாஜக அரசு படுதோல்வியடைந் டைந்துள்ள நிலையில், கல்வித் துறையை மேலும் சீரழிக்கும் நட வடிக்கைகளை அரசாங்கம் மேற் கொண்டுள்ளது என எஸ்எப்ஐ குற்றம் சாட்டியுள்ளது.