தோல்வி பயத்தில் அமைச்சரவையை மாற்றிய பாஜக
வாக்குத் திருட்டு, இவிஎம் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டால் பாஜகவின் தொடர் வெற்றியின் மீது சந்தேகம் வலுத்து வருகிறது. இதனால் பாஜக இலவசம் மற்றும் மதம், சாதிரீதியாக மக்களை கவரவும், பிரிக்கவும் தீவிர மாக இறங்கியுள்ளது. அதன் முதல்படியாக குஜராத் மாநி லத்தில் சாதிரீதியாக அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளது. குஜராத்தில் நீண்ட காலமாக பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், அங்கு 2027ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்த கைய சூழலில் திடீரென முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்களும் அக். 16 அன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கான காரணம் எதுவும் குறிப்பிட வில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று காந்திநகரில் நடைபெற்ற விழா வில், முதலமைச்சர் உட்பட மொத்தம் 26 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. வர விருக்கும் உள்ளாட்சி மற்றும் 2027 சட்ட மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்த அமைச்சரவை மாற்றம் அரங்கேறியுள்ளது என அரசியல் வல்லு நர்கள் கூறியுள்ளனர். முந்தைய அரசில் நிதியமைச்சராக இருந்த கனுபாய் தேசாய் மட்டும் புதிய அமைச்சரவையிலும் தக்கவைக்கப்பட் டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு வந்தவர்களை சமாதானப் படுத்த, அர்ஜுன் மோத்வாடியாவுக்கு (காங்கிரஸ் மூத்த தலைவர்) அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பின ரும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வின் மனைவியுமான ரிவாபா ஜடேஜா அமைச்சராகியுள்ளார். அதேநேரம், குஜராத் அரசியலில் முக்கிய வாக்கு வங்கியாக விளங்கும் பட்டேல் சமூகத்தைச் சேர்ந்த 6 தலைவர் களுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், பட்டிய லின வகுப்பைச் சேர்ந்த 3 பேருக்கும், சத்திரியர் சமூகத்திலிருந்து ஒருவர் மற்றும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பெண்களும் அமைச்சர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.