states

பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்  தகவல் அறியும் உரிமையின் கீழ் பதில் அளிக்க மறுக்கும் தேர்தல் ஆணையம்

பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்  தகவல் அறியும் உரிமையின் கீழ் பதில் அளிக்க மறுக்கும் தேர்தல் ஆணையம்

புதுதில்லி சத்தரக் நாகரிக் சங்காதன் மற்றும்  தேசிய மக்கள் தகவல் அறியும் உரிமை இயக்கத்துடன் தொடர்பு டைய சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் 2022-2003ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்ட தற்கான ஆணை மற்றும் அறிவிப்பின் நகலை தகவல் அறியும் உரிமையின் (ஆர்டிஐ) கீழ் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரினார். மேலும், வாக்காளர் திருத்தங்களின் முறை, வரையறுக்கப்பட்ட படிவங்கள் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் வழிகாட்டுதல்களின் நகல் உள்ளிட்டவைகளையும் வழங்குமாறு அவர் கோரினார். இதுதொடர்பாக ஆகஸ்ட் 27 அன்று தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில்,”கடைசியாக பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2002 மற்றும் 2003இல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கணக்கீட்டின்  முக்கிய காலம் ஜூலை 15, 2002 முதல் ஆகஸ்ட் 14, 2022  வரை ஆகும். இது சம்பந்தமாக 24.6.2025 தேதியிட்ட ஆணையை நீங்கள் குறிப்பிட லாம். குறிப்பிட்ட ஆணையின் இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறி பீகாரில் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் அறிவித்த ஜூன் 24, 2025 ஆணையின் இணைப்பை மட்டுமே வழங்கியது.  பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பெரும் முறைகேடு என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் தகவல் அறியும் உரிமையின் கீழ் பதில் அளிக்க மறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.