states

img

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு பீகார் பாஜக துணை முதலமைச்சருக்கு 2 வாக்காளர் அட்டை

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு  பீகார் பாஜக துணை முதலமைச்சருக்கு 2 வாக்காளர் அட்டை

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி  நடைபெற்று வருகிறது. முதல மைச்சராக ஐக்கிய ஜனதாதளம் தலை வர் நிதிஷ் குமார் உள்ளார். துணை முதலமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா  உள்ளனர். இந்நிலையில், வாக்காளர் சிறப்பு  தீவிர திருத்தத்திற்குப் பிறகு பீகார் பாஜக துணை முதலமைச்சர் விஜய்  குமார் சின்ஹாவிற்கு 2 வாக்காளர் அடையாள அட்டைகள் அளிக்கப்பட் டுள்ளதாக பீகார் எதிர்க்கட்சித் தலைவ ரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின்  தலைவருமான தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார்.  இதுதொடர்பாக ஞாயிறன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,”விஜய் சின்ஹா 2 வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளராக உள்  ளார். லக்சராய் சட்டமன்றத் தொகுதி  (IAF3939337) மற்றும் பாட்னா மாவட்டத்தில் உள்ள பாங்கிபூர் சட்ட மன்றத் தொகுதியில் (AFS0853341) என  அவருக்கு 2 வாக்காளர்கள் அட்டை உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தான் வழங்கியுள்ளது. வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பீகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர  ஆய்வுக்குப் பின்னரே, விஜய் சின்ஹா விற்கு 2 வாக்காளர்கள் அட்டை வழங்  கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்  பேற்க வேண்டும்? சின்ஹாவா? அல் லது, தேர்தல் ஆணையமா? இந்த முறைகேடு வெளிப்பாடுகளுக்குப் பிறகு அவர் (சின்ஹா) எப்போது தனது  பதவியை ராஜினாமா செய்வார்?” என  தேஜஸ்வி சரமாரியாக கேள்வி எழுப்பி யுள்ளார்.