states

img

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேஜஸ்வியை “இந்தியா” கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

பீகார் சட்டமன்றத் தேர்தல் ஜஸ்வியை “இந்தியா” கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்

பாட்னா 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் காங்கிரஸ், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் விகாசில் இன்ஸான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி (பசுபதி) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய “இந்தியா” (பீகாரில் மகா கூட்டணி) கூட்டணியும், பாஜக தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடு கின்றன. இரண்டு கூட்டணிகளும் இன்னும் முத லமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், ஆர்ஜேடி தலைவரும், தற்போதைய பீகார் எதிர்க்கட்சித் தலைவ ருமான தேஜஸ்வியை (லாலு பிரசாத் மகன்) “இந்தியா” கூட்டணியின் முதலமைச்சர் வேட்பா ளராக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.  இதுதொடர்பாக சிபிஎம் பீகார் மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,”பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் மகா கூட்டணியில் இன்னும் தொ குதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்க வில்லை. தொகுதி பங்கீடு தாமதம் ஏற் பட்டால் கூட்டணிக்கு மட்டுமின்றி பீகார் மாநி லத்திற்கும் ஆபத்தில் முடியும். அதனால் உட னடியாக தேஜஸ்வியை “இந்தியா” கூட்டணி யின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணி அர சாங்கத்தை அதிகாரத்தில் இருந்து அகற்ற  சிபிஎம் தொடர்ந்து களத்தில் பணியாற்றி வரு கிறது.அதனால் சிபிஎம் அதிக எண்ணிக்கை யிலான இடங்களில் போட்டியிட்டால் மகா கூட்டணி பயனடையும்” என அவர் கூறினார். அதே போல சிபிஐ மாநிலச் செயலாளர் ராம்  நரேஷ் பாண்டே செய்தியாளர்கள் கூட்டத்தில், “பீகார் சட்டமன்ற தேர்தலில் சிபிஎம், சிபிஐ கட்சிகளுக்கும் 35 இடங்கள் வரை ஒதுக்க வேண்டும். அதனால் மகா கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் சிபிஐ மற்றும் சிபிஎம்-க்கு ஆதரவாக தங்கள் சில இடங்களை தியா கம் செய்ய வேண்டும். தேர்தல் ஆணை யத்தால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் நம்பகத் தன்மையை  உறுதி செய்வதற்காக சிபிஐ மற்றும் சிபிஎம் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டு மாநாடுகளை நடத்தும்” என அவர் கூறினார்.