states

img

கேரளாவில் வடமாநில வங்கி மேலாளரை கண்டித்து மாட்டிறைச்சி திருவிழா கொச்சி கனரா வங்கி முன்பு “பீப் புரோட்டா” விருந்து அமோகம்

கேரளாவில் வடமாநில வங்கி மேலாளரை கண்டித்து மாட்டிறைச்சி திருவிழா

கொச்சி கனரா வங்கி முன்பு “பீப் புரோட்டா” விருந்து அமோகம்

கொச்சி கேரளாவில் முக்கிய உண வாக இருப்பது மாட்டி றைச்சி ஆகும். மாட்டிறை ச்சி இல்லாமல் கேரள மக்கள் உறங்க மாட்டார்கள் என்ற வழக்கும் உள்ளது.  இந்நிலையில், கேரளா மாநிலத் தின் முக்கிய நகரான கொச்சியில் கனரா வங்கி உள்ளது. இது உணவக (கேண்டீன்) வசதி கொண்டது. வங்கி க்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் கேண்டீனை பயன் படுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், சமீபத்தில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் கொச்சி கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் ஊழியர்களி டம் கடுமையாக நடந்து கொண்ட தாகக் கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் வங்கி கேண்டீன் மற்றும் அலுவலகத்துக்குள் மாட்டிறைச்சி க்கு தடை விதித்தார். இதனால் கொதித்தெழுந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.  பிராந்திய மேலாளரின் அலுவல கம் முன்பு வங்கி ஊழியர்கள் திரண்டு கேண்டீனில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு எதிராக கோஷ மிட்டனர். அதுமட்டுமின்றி ரொட்டி யுடன் (புரோட்டா) மாட்டிறைச்சி சேர்த்து சாப்பிட்டனர். பீப் (மாட்டிறை ச்சி) திருவிழா போல் அவர்கள் மாட்டிறைச்சியை பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். வங்கி ஊழியர்களின் சங்கம் கண்டனம் இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (Bank Employees Federation of India - BEFI) சார்பில் இந்த போ ராட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்ட மைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில்,”வங்கியில் சிறிய கேண்டீன் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் கேண்டீனில் மாட்டிறைச்சி சமைக்கப்படும். ஆனால் பிராந்திய மேலாளர் கேண்டீன் ஊழியர்களிடம் மாட்டி றைச்சியை சமைக்கக் கூடாது என்று தடை போட்டுள்ளார். இந்த வங்கி அரசியலமைப்பின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகிறது. உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப் பட்ட விருப்பம். நம் நாட்டில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை தேர்வு செய்து சாப்பி டலாம். மாட்டிறைச்சி சாப்பிடுங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டா யப்படுத்தவில்லை’’ எனக் கூறி னார். எம்எல்ஏ ஆதரவு இந்த போராட்டத்துக்கு இடது சாரி கூட்டணியில் உள்ள சுயேச்சை  எம்எல்ஏ ஜலீல் ஆதரவு தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,”என்ன ஆடை அணிய வேண்டும்? எந்த உணவு சாப்பிட வேண்டும்? என்பதை மேலதி காரிகளால் முடிவு செய்ய முடி யாது. இது எங்களின் செம்மண் பூமி  (இடதுசாரி ஆட்சியை குறிப்பிடுகி றார்). எங்கெல்லாம் செங்கொடி பறக்கிறதோ அங்கெல்லாம் பாசிஸ்டுகளுக்கு எதிராகப் பேசலாம்; செயல்படலாம். கம்யூனிஸ்ட்டுகள் ஒன்று சேர்ந்தால், காவிக் கொடியை தூக்கி பிடிப்போரை காம்ரேட்ஸ்கள் (தோழர்கள்) விடமாட்டார்கள். அதுதான் உலக வரலாறு’’ என்று கூறியுள்ளார்.