states

img

அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சொல்கிறார் பாபர் வருவதற்கு முன் இந்தியாவில் அனைவரும் இந்துக்கள்தான்!

புதுதில்லி, டிச. 3 - “முகலாய மன்னர் பாபர்  வருவதற்கு முன், இந்தியா வில் அனைவரும் இந்துக் களாகத்தான் இருந்தனர்” என்று, அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். இதுதொடர்பாக சர்மா மேலும் பேசியிருப்பதாவது: இந்துக்கள் பெரும் பான்மையாக வாழும் நாடு இந்தியா. இந்துக்கள் உலகில் எந்த நாட்டில் வசித் தாலும், அவர்கள் இந்திய வம்சாவளியினராகத்தான் இருப்பார்கள். வெளிநாடு களில் வசிக்கும் இந்துக் களுக்கு கஷ்டம் ஏற்பட்டால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம்; அது, அவர்களது உரிமை. முகலாய மன்னர் பாபர் 1526-இல் இந்தியாவுக்கு வந்தார்.

அதற்கு முன்பு வரை இந்தியாவில் இந்துக் கள் மட்டுமே இருந்தனர்.  கோவில் கட்டுவது, கோவிலை சீரமைப்பது ஆகிய பணிகள் மதவாத மாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. கோவில் கள் கட்டுவதும், சீரமைப்ப தும் இந்துக்களின் உரிமை.  ஒரு இந்துவால் மட்டுமே  உண்மையான மதச்சார் பின்மைவாதியாக இருக்க முடியும். இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை. இதை தடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. 5 ஆயிரம் ஆண்டு களுக்கு மேலாக இந்துத்துவா இந்தியாவில் உள்ளது. இங்குள்ள கிறிஸ்து வர்கள், முஸ்லிம்களின் முன்னோர்கள் இந்துவாகத் தான் இருந்தனர். இந்தியா இருக்கும் வரை இந்துத்துவாவும் இருக்கும்.  இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.