states

தீக்கதிர் விரைவு செய்திகள்

அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்க்கும் மோடி அரசு

வெளிநாட்டு பொருட்களை புறக்கணிப்போம் ; இந்திய பொருட்கள் மற்றும் நிறுவனங்களை ஆதரிப்போம் என பிரத மர் மோடி ஒவ்வொரு வாரமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் பிர தமர் மோடி கூறுவது ஒன்றும், அவரது அரசின் செயல்பாடு வேறொன்றுமாக உள்ளது. இந்நிலையில், இந்திய சுற்று லாவை மேம்படுத்துவது என்ற பெயரில் பிரபல ஓடிடி பிளாட்பார நிறுவன மான “நெட்பிளிக்ஸ் (Netflix)” நிறுவ னத்துடன் ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் இணைந்து, இந்தியாவின் சுற்றுலாத் தலங்களை திரைப்படங்களில் காட்சிப்படுத்தி, பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், திரைப்படங்களின் கதைக்குள் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டு வருவதற்கு சுற்று லாத் துறை மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவன அதிகாரிகள் இணைந்து செயல்படு வார்கள் என்றும் ஒன்றிய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“சோனம் வாங்சுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கிறதாம்”  

லடாக் யூனியன் பிரதேசத்தில் லே மாவட்டத்தில் நிகழ்ந்த வன் ்முறைக்கு காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்திய உண்ணாவிர தப் போராட்டம் தான் காரணம் என அவரை வெள்ளிக்கிழமை அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது லடாக் யூனியன் பிரதேச நிர்வா கம். தொடர்ந்து சனிக்கிழமை அன்று அதி காலை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மத்திய சிறையில் சோனம் வாங்சுக் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், சோனம் வாங்சுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக லடாக் டிஜிபி கூறியுள்ளார். இதுதொ டர்பாக டிஜிபி சிங் ஜம்வால் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில், “சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். அவர் பாகிஸ்தான் ஏஜெண்ட் ஒருவருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள் ளது. இதுதொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும்” என அவர் கூறியுள்ளார்.

3 மாநிலங்களுக்கு ஆயுதப்படை  சிறப்பு சட்டம் நீட்டிப்பு

மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்க ளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 மாநி லங்களில் அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடை முறையில் இருக்கும் என்றும், மாநிலங்க ளின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறி வித்துள்ளது. இந்த நீட்டிப்பு மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.