states

img

வெகுஜன படுகொலைகளுக்கான ஆபத்து அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8-ஆவது இடம்!

சூடான், சோமாலியா, சிரியா, ஈராக், ஜிம்பாப்வே-வை விடவும் மோசம்

புதுதில்லி, டிச. 6 -  உலகில், வெகுஜன படுகொலை நடப்ப தற்கான ஆபத்து அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் இருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘முன் எச்சரிக்கை திட்டம் (Early Warning Project - EWP)’ என்ற அமைப்பு, தனது ஆய்வறிக்கை யில் கூறியுள்ளது. ‘முன் எச்சரிக்கை திட்டம் (Early Warning Project - EWP)’ என்பது வெகுஜன படுகொலைக் கான ஆபத்து உள்ள நாடுகளை அடையா ளம் காணும் ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பானது, பரவலா கக் கிடைக்கும் தரவுகளின் வரம்பைப் பயன் படுத்தி உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பெரு மளவில் நடக்கும் அட்டூழியங்களின் அபா யத்தை மதிப்பிடும் பணியை மேற்கொண்டு வருகிறது. வெகுஜன படுகொலைகளை சந்திக்கும் ஆபத்து உள்ள நாடுகளின் பட்டிய லையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-23-ஆம் ஆண்டிற்கான வெகுஜன படுகொலைகள் ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலை ‘முன் எச்சரிக்கை திட்டம்’ தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 162 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ள அந்த பட்டியலிலேயே, இந்தியா 8-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஒரு குறிப்பிட்ட குழுவில் உறுப்பினர்க ளாக இருப்பவர்கள் மற்றும் பொதுமக்கள்- ஓராண்டு அல்லது அதற்கு குறைவான காலத் தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கை யில் ஆயுதப் படைகளால் அல்லது ஆயுதப் படைகள் அல்லாதவர்களால் கொல்லப்பட்டால் அதனை வெகுஜன கொலையாக ‘முன் எச்ச ரிக்கை திட்டம் (EWP)’ அமைப்பு வரையறுக் கிறது. இனப்படுகொலைகளும் இந்த வரை யறைக்குள் அடங்குகிறது.  இதனடிப்படையில், வெகுஜன படுகொலை களை சந்திக்கும் ஆபத்து அதிகமுள்ள  நாடுகளின் பட்டியலில் 16.3 சதவிகித ஆபத்து டன், மூன்றாவது முறையாக பாகிஸ்தான் முதலி டத்தைப் பிடித்துள்ளது. 12.9 சதவிகித ஆபத்து டன் ஏமன் 2-ஆவது இடத்திலும், 10.8 சதவிகித ஆபத்துடன் மியான்மர் மூன்றாவது இடத்தி லும், 9.2 சதவிகித ஆபத்துடன் ‘சாத்’ (Chad)  4-ஆவது இடத்திலும், 8.7 சதவிகித ஆபத்து டன் எத்தியோப்பியா 5-ஆவது இடத்திலும், 7.9 சதவிகித ஆபத்துடன் நைஜீரியா 6-ஆவது இடத்திலும், 7.7 சதவிகித ஆபத்துடன் ஆப் கானிஸ்தான் 7-ஆவது இடத்திலும் வந்துள்ளன. இந்தப் பட்டியலில்தான், 7.4 சதவிகித ஆபத்துடன் இந்தியா 8-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவை விடவும் சூடான், சோமாலியா நாடுகள் ஆபத்து குறைவான நாடு களாக கணிக்கப்பட்டு உள்ளன. 7.3 சதவிகித ஆபத்துடன் சூடான் 9-ஆவது இடத்தையும், 6.9 சதவிகித ஆபத்துடன் சோமாலியா 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

“2017–18 மதிப்பீட்டில் இருந்து, கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது உட்பட அதிக படுகொலை ஆபத்துள்ள ‘முதல் 15 நாடுகளில்’ ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த ஆண்டு 11 சதவிகித ஆபத்து டன் 2-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. அதேநிலை நீடித்திருந்தால், இந்தாண்டு இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கவும் வாய்ப்பு இருந்தது” என்று ‘முன் எச்சரிக்கை திட்டம்’ அமைப்பு கூறியுள்ளது. ஒன்றிய அரசின் நிர்வாகத்திலும், மாநி லங்களிலும் அதிகாரத்திலுள்ள பாஜக, சிறுபான்மையினர் மீது காட்டும் பாரபட்சம், சிஏஏ-வுக்கு எதிரான தில்லி போராட்டத்தின் போது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், ராமநவமி ஊர்வலத்தையொட்டி புல்டோசர் மூலம் ம.பி., குஜராத், உ.பி., தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இஸ்லாமியர் வீடுகள், கடைகள், ஹரித்துவார் சாமியார்கள் மாநாட்டில் பகிரங்கமாக விடுக்கப்பட்ட இனப்படுகொலைகளுக்கான அழைப்பு ஆகியவை இந்தியாவில் வெகுஜன படுகொலைக்கான ஆபத்து அதிகரித்து இருப்ப தற்கு காரணம் என்றும் ‘முன் எச்சரிக்கை திட்டம்’ அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்து கள் உட்பட பிற சிறுபான்மையினர் மற்றும் துன்புறுத்தப்பட்ட குழுக்கள் தொடர்ந்து வன் முறை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின் றனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடர்ந்து நடை பெறும் மனித உரிமை மீறல்கள், தீவிரவாதிக ளால் இந்துக் குடிமக்கள் (பண்டிட்டுகள்)  குறி வைக்கப்படுவது மற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீதான இந்திய அரசின் அடக்குமுறை உள்ளிட்ட நிகழ்வு களையும் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2020 தில்லி வன்முறையில் 53 பேர் கொல் லப்பட்டனர். தில்லி வன்முறை வெடிப்பதற்கு ஒரு நாள் முன்பு, பாஜக தலைவர் கபில் மிஸ்ரா,  புதுதில்லியின் ஜாப்ராபாத்தில் குடியுரிமை (திருத்த) சட்ட (CAA) எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்தார். மிஸ்ராவின் பேச்சிலிருந்தே தில்லி வன்முறை துவங்கி யதாக பல்வேறு உண்மைகள் உண்மை கண்ட றியும் குழுக்களின் அறிக்கைகள் குறிப்பிட்டன. எனினும், பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, தனது வெறுப்புப் பேச்சுக்காக வருத்தப்படவில்லை. மாறாக மீண்டும் வன்முறையைத் தூண்டி னார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. தற்போது தகவல் மற்றும் ஒளி பரப்புத் துறை அமைச்சராக இருக்கும் பாஜக தலைவர் அனுராக் தாக்கூர், ‘தேஷ்  கே கதாரோன் கோ, கோலி மாரோ சலோன் கோ (நாட்டின் துரோகிகளை சுட்டுக் கொடுங் கள்)’ என்று கோஷமிட்ட வீடியோக்கள் வெளியா கின. ‘கோலி மாரோ சலோன் கோ’ என்பது சிஏஏ ஆதரவு பேரணிகளில் பயன்படுத்தப்பட்ட முக்கிய முழக்கங்களில் ஒன்றாகும். இருப்பி னும், 2020-ஆம் ஆண்டு தில்லி தேர்தல் பிரச்சா ரத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்து கொண்ட மேடையிலேயே தாக்கூர் இந்த முழக்கத்தை முன்வைத்தார். கபில் மிஸ்ராவும் இதே கோஷத்தை எழுப்பி னார். தனது கோஷத்தில் எந்த தவறும் இல்லை என்று பேட்டியும் அளித்தார்.

2021 டிசம்பரில், ஹரித்வாரில் நடந்த மூன்று  நாள் ‘தர்ம சன்சத்’ அல்லது ‘மதப் பாராளு மன்றம்’ ஒன்றில் இந்துத்துவா தலைவர்கள் ஒன்றுகூடி, அங்கு முஸ்லிம்களை இனப்படு கொலை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் முஸ்லிம்களை ராட்சசர்கள் அல்லது பேய்கள் என்று வர்ணித்திருந்தார். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இனப்படுகொலை கண்காணிப்பு அமைப் பின் நிறுவனத் தலைவர் கிரிகோரி ஸ்டாண்டன், கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் இனப்படுகொலைக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் ஏற்கனவே தெரியும் என்று கூறியிருந்தார். வெறுப்பு ணர்வைத் தூண்டும் பேச்சுகளைக் கண்டிக்க வேண்டிய கடமை பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இருப்பி னும், இதுபோன்ற நிகழ்வுகளில் பிரதமர் கவனம் செலுத்தவில்லை. ஒன்றுமே நடக்க வில்லை என்பது போல அவர் இருந்து கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முஸ்லிம்களை குற்றவாளிகள் (அப்ராதியோன்), மாபியாக்கள் மற்றும் கலவ ரக்காரர்கள் என்று பலமுறை அவதூறு செய்தார்.

மத்தியப் பிரதேசத்தில் இந்துப் பண்டிகை யான ராம நவமியின் போது, ஊர்வலங்களில் திரளானோர் வாள்கள் மற்றும் தடிகளை ஏந்திய படி மசூதிகளைக் கடந்து செல்லும்போது அவ தூறான கோஷங்களை எழுப்பினர். மசூதிகள் அவமதிக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரி வித்த முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன, இது ‘வெகுஜன தண்டனை’க்கான வெளிப் படையான முயற்சி என்பதை மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டின. 2021-ஆம் ஆண்டின் ஒன்பது மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 300 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங் கள் பதிவாகியுள்ளன. இந்த காரணிகளின் அடிப்படையிலேயே இந்தியாவில் வெகுஜன படுகொலைகளுக்கான ஆபத்து அதிகம் இருப்பதாக ‘முன் எச்சரிக்கை திட்டம்’ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. சிரியா (11-ஆவது இடம்), ஈராக் (12-ஆவது இடம்) மற்றும் ஜிம்பாப்வே (14-ஆவது இடம்) ஆகிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான இடத்தில் இருப்பதாக கூறியுள்ளது. இந்தியா வில் 14 பேருக்கு ஒரு படுகொலை நடப்பதற் கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.

 

;