states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வலிமையும் நம்பிக்கையும் பொருந்திய ஒரு தலைவர் எவரும் “என்னை இப்படி சொல்லிவிட்டார்கள்” என அழுத வரலாறு இல்லை. ஆனால் மக்களின் ஆதரவு குறையத் தொடங்கினால், அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் இப்படித்தான் புலம்பத் தொடங்குகிறார்கள். ஓர் ஆளுங்கட்சி தாம் பாதிக்கப்பட்டதாக புலம்பினால், அதன் அதிகாரப்போக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என பொருள்.

அரசியல் சாசனம் உண்மையில் ஆளுநர் பொறுப்பை என்ன அளவில் குறிப்பிடுகிறதோ அந்த அளவில்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கான அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தை திரித்து புரிந்து கொள்ளக் கூடாது.

5 வருடங்களுக்கும் மேலாக விசாரணை இன்றி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் உமர் காலீத்துக் கும், பிறருக்கும் ஜாமீன் மறுத்த தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ஷைலேந்திரா கவுர் பணி ஓய்வு (வியாழக்கிழமை) பெற்றுவிட்டார். அடுத்து அந்த நீதிபதி என்ன அரசு பதவியை பெறப் பெறுகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

வெளிநாட்டுப் பயணத்தால் இந்தியா என்ன சாதித்தது என்று சொல்ல வேண்டிய பிரதமர் மோடி வழக்கம் போல் மேடையில் நின்று அழுகிறார். வெளியுறவுக் கொள்கை என்பது சத்தமாக சிரிப்பது என்று பிரதமர் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறார்.