பொதுப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திடும் ஓர் ஏமாற்றும் திட்டம் : சிஐடியு தாக்கு
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம்
ஒன்றிய அரசாங்கம் ஒப்புதல் அளித் துள்ள வேலைவாய்ப்புடன் இணைக் கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம், பொதுப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திடும் ஓர் ஏமாற்றுத் திட்டம் என்று சிஐடியு கூறியிருக்கிறது. இதனை எதிர்த்துப் போராட தொழிலாளர் வர்க்கம் கிளர்ந்தெழ வேண்டும் என்றும் அது கோரியிருக்கிறது. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசாங்கத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள 99,446 கோடி ரூபாய்க்கான வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் என்பது மோடி அரசாங்கத்தின் மற்றொரு ஏமாற்றுத் திட்டம். இது பொது நிதியை கார்ப்ப ரேட்டுகளுக்கு மடை மாற்றுவதற்கான ஒரு திட்ட மேயாகும். இந்தத் திட்டமும், ஒன்றிய அரசாங்கத்தால் முன்பு 1.97 லட்சம் கோடி ரூபாயுடன் கொண்டு வரப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்துடனும், 76,000 கோடி ரூபாய் மூலதனச் செலவு ஊக்குவிப்புத் திட்டத்து டனும் ஒத்துப்போகிறது. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கு விப்புத்திட்டம் 2020ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. பின்னர் இது 60 லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்கும் உரிமையுடன் மொத்தம் 17 தொழில்களுக்கு விரிவாக்கப்பட்டது. இதனால் கோரப்பட்ட இலக்குக்கு மாறாக 7 லட்சம் வேலை வாய்ப்புகள் கூட உருவாக்கப்படவில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர், இந்தத் திட்டத்திற்காக 1.97 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோ திலும், பயனாளிகளால் செய்யப்பட்ட கூடுதல் முதலீடு 1.76 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே என்று கூறினார். இதேபோன்று குஜராத்தில் சனந்த் பகுதி யில் உருவாக்கப்பட்ட ஒரு வேலைக்கு சுமார் 3.25 கோடி ரூபாய் மானியம் ஊக்கத்தொகை யாக வழங்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான், டாடாஸ், முருகப்பா குழுமம், ஜப்பா னிய மற்றும் தைவான் நிறுவனங்களுக்கு அவை அளிக்கப்பட்டன. இந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், பொது மக்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி மூலம் சேகரிக்கப்பட்ட பொது நிதியின் மூலம், உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுச் செலவு, உற்பத்திச் செலவுகளுக்கு மானியம் வழங்கும் திட்டங்களாக மாறிவிட்டன. இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கு விப்புத் திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டங்களின் கீழ் முதலாளி களின் தொழிலாளர் செலவு மற்றும் சட்டப் பூர்வ பொறுப்புகளை பொது நிதியிலிருந்து மானியமாக அளிக்கப்பட இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச்சட்டம் மற்றும் பிற திட்டங்க ளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆண்டுதோறும் வெகுவாகக் குறைக்கப்படும் அதே வேளை யில், இத்தகைய மானியங்கள் கார்ப்ப ரேட்டுகளுக்கு மடைமாற்றப்படக்கூடிய விதத்தில் விரிவுபடுத்தப்படுகின்றன. ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ள இந்த வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம், 2024-25 ஒன்றிய பட்ஜெட்டில் அறி விக்கப்பட்ட 2 லட்சம் கோடி ரூபாய் வேலை வாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு பகு தியாகும். இது தொழிலாளர் செலவுகள் மற்றும் முதலாளிகளின் சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கு மானியம் வழங்கும் பலவீனமான மற்றும் நிலையற்ற இயல்புடைய வேலைகளை உரு வாக்குகிறது. இதை சிஐடியு மற்றும் தொழிற் சங்கங்களின் சம்மேளனங்கள் எதிர்த்தன. ஆயினும் மோடி தலைமையிலான அரசாங்கம் அதைப் புறக்கணித்தது. இப்போது வேலை வாய்ப்பை உருவாக்குதல் என்ற பெயரில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது பொது நிதியை கார்ப்பரேட்டுகளுக்கு மாற்று வதற்கான மற்றொரு ஏமாற்றும் வழிமுறை யேயாகும். இந்த ஏமாற்றுத் திட்டங்களை நிராகரிக்க வும், இதுபோன்ற ஏமாற்றுக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங் கங்களின் அறைகூவலுக்கிணங்க 2025 ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சிஐடியு தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துப்பகுதி தொழிலாளர்களையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு தபன்சென் அந்த அறிக்கையில் கோரியுள்ளார். (ந.நி.)